குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய வீடியோ! காத்திருக்கும் போலீஸ்! இர்பான் எங்கே இருக்கிறார் தெரியுமா?
சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை பதிவேற்றம் செய்த யூடியூபர் இர்பான் தற்போது ஜப்பானில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் மா. சுப்பிரமணியன், இர்பான் மன்னிப்பே கேட்டாலும் மன்னிக்க முடியாது, விட மாட்டோம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டதால் அடுத்த கட்டமாக போலீஸார் எந்தவிதமான நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யூடியூபர் இர்பானுக்கு ஆசிஃபா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பே இர்பான் தனது சேனலில் போட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இதைத் தொடர்ந்து அவர் அடுத்த நாள் ஒரு வீடியோ போடுவதாக சஸ்பென்ஸ் வைத்திருந்தார்.

என்ன வீடியோவாக இருக்கும் என அவருடைய பாலோயர்கள் எல்லாம் ஆவலாக காத்திருந்தார். அப்போது இர்பான், தனது மனைவிக்கு சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்த விஷயத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதாவது இர்பானின் மனைவி வீட்டிலிருந்து கிளம்பியது முதல் மருத்துவமனையில் அட்மிட் ஆகி குழந்தை பிறந்தது வரை போட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் குழந்தையை கையிலேந்தி கண் கலங்கி நெகிழ்கிறார். மேலும் தனக்கு ஒரு தேவதையை பெற்றுக் கொடுத்த தனது மனைவியின் வேதனையை புரிந்து கொண்டு அவரை அணைத்து ஆறுதல் சொல்கிறார். இதெல்லாம் சரி! ஆனால் அவர் வீடியோ எடுத்த இடம் ஆபரேஷன் தியேட்டர்! அங்கு ஒரு திரை போட்டு மனைவிக்கு சி செக்ஷன் செய்கிறார்கள்.
மேலும் குழந்தை பிறந்ததும் அந்த பெண் மருத்துவரே , நீங்கள் தொப்புள் கொடியை கட் செய்கிறீர்களா என கேட்கிறார். இவரும் போய் கட் செய்கிறார். இதுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது 100 சதவீதம் கிருமிகளே தொற்றாத அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்குள் வீடியோ கிராபரை அழைத்து வந்துள்ளார்.
இவர் தொப்புள் கொடியை கட் செய்த போது அவர் முழுக்கை சட்டை அணியவில்லை. எனவே இது போன்ற செயல்கள் குழந்தைக்கும் தாய்க்கும் தொற்றை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். எல்லாவற்றையும் விட அறுவை சிகிச்சை அறையில் நோயாளி தனது மனைவியே இருந்தாலும் அதை வீடியோவாக எடுத்து பொது வெளியில் போடுவது தவறு என்கிறார்கள்.
இன்னொரு, இர்பானை பார்த்துவிட்டு நிறைய யூடியூபர்களும் தங்கள் மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்க வேண்டும், தொப்புள் கொடியை கட் செய்ய வேண்டும் என புறப்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் பெரும்பாலான மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் ஊரக மருத்துவமனை இயக்ககம், செம்மஞ்சேரி காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.
அதாவது இர்பான் மனைவிக்கு பிரசவம் நடந்த மருத்துவமனை சோழிங்கநல்லூரில்தான் உள்ளது. இர்பான் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த சட்டத்தில் உள்ள முக்கிய விதிமுறையே, அறுவை சிகிச்சை அரங்கினுள் மருத்துவரல்லாத ஆட்கள் நுழைய கூடாது. அறுவை சிகிச்சை அரங்கினுள் கத்தரிக்கோலை மருத்துவரோ செவிலியரோதான் பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வேளை விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்கிறார்கள். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கே நேரில் சென்ற மருத்துவ குழுவினர் அங்கிருந்த சில ஆதாரங்களை சேகரித்துள்ளனராம். அது போல் இர்பான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரோ தற்போது ஜப்பானில் இருக்கிறாராம். இந்த விவகாரம் நாளுக்கு நாள் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இர்பான், ஜப்பானில் இருந்து வந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். மேலும் மருத்துவரின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்குக் கூட தண்டனை கிடைக்கும் என்கிறார்கள். இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிய வேண்டும் என்றால் , இர்பான் சென்னை வந்தால்தான் தெரியும். ஒரு வேளை போலீஸார் ஜப்பான் சென்று அவர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என தெரியவில்லை. ஒரு வேளை அவர் ஜப்பானில் இருந்து விரைவில் வந்துவிட வாய்ப்பிருந்தால் அவர் வந்ததும் போலீஸ் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications