யூடியூபர் இர்பானின் அரசியல்! ஏணி சின்னத்துல ஒன்னு.. தென்னமர சின்னத்துல ஒன்னு -திருமண அழைப்பால் கலாய்
சென்னை: திருமண ஏற்பாடுகள் படு பசியாக இருக்கும் பிரபல யூடியூபரான இர்பான் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். எது என்ன வீடியோ? விரிவாக பார்ப்போம்.
தமிழ் யூடியூபர்களில் மிகவும் பிரபலமான முகமாக அறியப்படுபவர் இர்பான். குறிப்பாக VLOG மூலமாக இத்தனை ரசிகர்களை பெற முடியுமா என்ற கேள்விக்கு ஆம் என்று பலரையும் பதிலளிக்க வைக்கும் அளவுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

தனது வீட்டு அறையில் ஒரு செல்போன் கேமரா முன்பாக அமர்ந்துகொண்டு போர்ன்விடா, ஹைட் அண்ட் சீக், பிரிட்டானியா பிஸ்கட்டுகளை சாப்பிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் ஆண்டு முதல் வீடியோவை வெளியிட்ட இர்பானுக்கு அப்போது தெரியாது இதனால் பிற்காலத்தில் மிகப்பெரிய பிரபலமாவோம் என்று.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே பகுதி நேரமாக உணவு விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வந்த இர்பானுக்கு இன்று யூடியூபே முழு நேர வேலையாக மாறிவிட்டது. இன்று அவர் சிலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். உணவு ரிவ்யூ மட்டுமின்றி வாகனங்கள், பண்டிகைகள், பயண வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு இவர் வெளியிட்ட விமர்சன வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுத் தந்தன. யூடியூபில் சம்பாதித்த பணம் மூலம் ஐபோன், சொகுசு கார் தொடங்கி வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கே மாறி இருக்கிறார் இர்பான்.
இவர் வெளியிட்ட உணவு விமர்சன வீடியோக்களை விட, கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் அமெரிக்கா சென்று அங்கு வெளியிட்ட வீடியோக்கள் உணர்வுப்பூர்வமாக பலரை கவர்ந்தன. குறிப்பாக நடிகர் நெப்போலியனுடன் இவர் வெளியிட்ட வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கண்கலங்க வைத்தன.
இந்த வளர்ச்சிக்கு மத்தியில் பல்வேறு சவால்களையும் இர்பான் எதிர்கொண்டு இருக்கிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டுவிட்டு விமர்சனம் செய்த உணவகத்தில், அண்மையில் தயாரிக்கப்பட்ட உணவில் ஏதாவது குறை என்றாலும் இர்பான் மீது விமர்சன அம்புகள் பாயும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது யூடியூப் சேனலே முடக்கப்பட்டது. அதிலும் இவர் மீண்டு வந்தார்.
சவால்களை கடந்து சாதனை பயணத்தை தொடர்ந்து வரும் இர்பான் சினிமாக்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல திரை பிரபலங்களுடன் இவர் உணவு விமர்சன வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். ஏதாவது ஒரு திரைப்படத்தை புரோமோசன் செய்ய வேண்டும் என்றாலும் இர்பானை தேடி வருகின்றன பட நிறுவனங்கள்.
இப்படி தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட முகமாக உள்ள இர்பான் வெளியிடும் அனைத்து வீடியோக்களிலும் தவறாமல் இடம்பெறும் கமெண்ட், இர்பானுக்கு கல்யாணம் எப்போது என்பதுதான். இதற்கு பதிலளிக்கும் வகையில் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டு இருக்கின்றன. தனது திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.
அதில் நடிகர் கவின் உள்ளிட்ட பலர் அவருடன் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூபர் இர்பான் தனது குடும்பத்தினருடன், ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தனது திருமணத்துக்கு வருமாறு அழைப்பிதழ் வழங்கிய புகைப்படம் அண்மையில் வைரலானது. இந்த நிலையில் அந்த வீடியோவை தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ஆளுநருக்கு அழைப்பிதழ் வழங்கியதோடு, திமுக எம்பி கனிமொழிக்கு அழைப்பிதழ் வழங்கிய வீடியோவையும் சேர்த்து பகிர்ந்து இருக்கிறார். அதற்கு முன் நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததை தனி வீடியோவாக வெளியிட்ட இர்பான், இந்த இரண்டையும் சேர்த்து வெளியிட்டது, வடிவேலுவின் பிரபல வசனமான ஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னத்துல ஒரு குத்து என்பதுபோல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications