Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயலாமையை கிண்டல் பண்ணி.. வீடியோ போட்டு காசு பார்க்கிற புத்தி.. இர்ஃபான் மீது நெட்டிசன்கள் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரமலான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையின் போது ஏழைகளுக்கு தங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் பகிருவார்கள்.. அந்த வகையில் யூடியூபர் இர்ஃபான் ரமலான் தினமான நேற்று ஏழைகளுக்கு உதவி செய்தார்.. அப்போது ஒருவர் உதவி பொருளை வாங்கும் போது, கோபத்தில் இர்ஃபான் வார்த்தைகளை விட்டுவிட்டார். அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதை பார்த்து பலரும் இர்பான் விமர்சித்து வருகிறார்கள்.

யூடியூபர் இர்ஃபான் அண்மைக் காலமாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு சமூகவலைதளத்தில் வெளியிட்டார். குழந்தையின் பாலினத்தை கண்டறிவதுசட்டப்படி இந்தியாவில் குற்றம் ஆகும். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

அடுத்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் அப்போது புகார் அளித்திருந்தார்.

youtuber irfan s video of helping during Ramadan sparks controversy netizen reactions

மன்னிப்பு கேட்டார்

இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய முந்தைய விவகாரத்தைப் போல் இல்லாமல், இம்முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்போது ஆவேசமாக தெரிவித்தார். அதன்பின்னர் சர்ச்சைக்குரிய வீடியோ அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டது.

இர்ஃபான் குறித்து கேள்வி

இதனிடையே இர்ஃபான் மன்னிப்பு கேட்டதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.. அதேநேரம் பெரிய இடத்து செல்வாக்கு உள்ளதால் தான் இர்ஃபான் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் அரசும் மீதும் அப்போது கடுமையான விமர்சனங்கள் வந்தன. நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அமைச்சர் மா சுப்பிரமணியத்தை அப்போது பலர் கேள்விகளால் துளைத்தனர்.

ஏழைகளுக்கு உணவு

இந்நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் இர்ஃபான் சிக்கி உள்ளார். ரமலான் பண்டிகையான நேற்று இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ஏழைகளுக்கு உதவி செய்தார். அவர் ஏழைகளுக்கு பையில் உணவு, துணி உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கியதை தனது யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இர்ஃபான் கோபம்

அந்த வீடியோவில் ஒருவருக்கு இர்ஃபானின் மனைவி பொருளை வழங்குகிறார். அதை வாங்கியவர்,வேகமாக கையை இழுத்து பறித்தாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இர்ஃபான் இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்..

கோபம் ஏன்

ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டுகிறார்.. இதை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக இர்பான் வெளியிட்டிருந்தார். அதில் தனது மனைவியின் கையில் வாங்கும் போது, ஒருவர் கையில் நகத்தை வைத்து இழுத்துவிட்டதாகவும் , அதனால் கோபம் அடைந்ததாகவும் கூறியிருந்தார்.

திருந்த மாட்டாரா

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் இர்ஃபானை விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "காருக்குள்ள உக்காந்து குடுத்தா கிடைக்குமோ கிடைக்காதோ ன்னு முண்டியடிச்சி வரத்தான செய்வாங்க... அதுக்கென்னமோ கொள்ள காரங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பிஜிஎம் அப்புறம் நக்கல்னு... இது ஒரு கன்டென்ட்.. திருந்தவே மாட்டாரா இவரெல்லாம்" என ஒருவர் வசைபாடியுள்ளார்.

youtuber irfan s video of helping during Ramadan sparks controversy netizen reactions

மன்னிப்பு வீடியோ வரும்

இன்னொரு நெட்டின் வெளியிட்ட பதிவில், "இவங்கள தட்டி கேட்க யாரும் இல்லையா, உனக்கு எதிரி நீயேதான். இதுக்கும் ஒரு மன்னிப்பு வீடியோ வரும்" என கூறியுள்ளார்.

கீழே இறங்கி கொடுத்திருக்கலாம்

மூன்றாவதாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், தர்மம் செய்வது என்பது வலது கை கொடுப்பது இடது கைக்குதெரியக்கூடாது என்பார்கள்.. கொடுக்கும் எண்ணம் இருந்தால் காரை விட்டு இறங்கி கொடுத்து இருக்கலாம்.. இதெல்லாம் எதில் சேர்ப்பது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

youtuber irfan s video of helping during Ramadan sparks controversy netizen reactions

என்ன புத்தி

"உதவி பண்றதுனா நல்ல மனசோட பண்ணுங்கடா... அவங்க இயலாமைய கிண்டல் பண்ணி.. அதையும் வீடியோ போட்டு காசு பார்க்கிற புத்தி.. ச்சை" என்று இன்னொரு நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி பல்வேறு நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.இந்த விவகாரம் தொடர்பாக இர்ஃபான் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+