"சிஎம் ஆஃப் இந்தியா.. தளபதியா? தலைவிதியா?" யூடியூபர் ஸ்பீடுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் ரசிகர்
சென்னை: சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள யூடியூபர் ஸ்பீட் லைவ் வீடியோவில் இளைஞர்கள் சிலர் டிவிகே என்றும் தளபதி விஜய் என்றும் கோஷம் போட்டுள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் புரியாமல் குழம்பிய ஸ்பீட், அது என்ன தலைவிதி தலைவிதி என சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்பது போலக் கேட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட். இவர் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகளவில் அதிக பலோயர்ஸ்களை கொண்ட சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது. மேலும், இவர் எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே லைவ் போடுவார்.

ஸ்பீட்
மற்ற யூடியூபர்களின் லைவ் போல இது கொஞ்ச நேரம் மட்டும் இருக்காது. பல மணி நேரம் கூட தொடர்ந்து ஓடும். இந்த லைவை பலரும் பார்த்து ரசிப்பார்கள். இதுவே ஸ்பீடின் ஸ்டைல். இதுபோன்ற லைவ் வீடியோவில் பல சம்பவங்கள் நடக்கும். அவை தனியாகவே டிரெண்டாகும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.
அதாவது ஸ்பீட் இப்போது தாய்லாந்து சென்றுள்ளார். அங்கிருந்தபடி அவர் வழக்கம் போல லைவ் போட்டுள்ளார். அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை தமிழகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.
விஜய் ரசிகர்கள்
அதில் ஸ்பீட் காரில் அமர்ந்தபடி செல்கிறார். அவரை டூவீலரில் இருவர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் வீடியோ எடுத்தபடியே.. ஸ்பீடை பார்த்து டிவிகே, டிவிகே என கத்துகிறார்கள். ஸ்பீடிற்கு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஸ்பீடிற்கு விவிகே என காதில் விழுந்துள்ளது. இதனால் அவர் அதென்ன விவிகே என அவர்களிடம் கேட்கிறார்.
அதற்கு அந்த இளைஞர்கள் "தளபதி விஜய்".. "தளபதி விஜய்" என கத்துகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என புரியாமல் குழம்பிய ஸ்பீட் என்ன தான் சொல்கிறார்களோ என்று சலித்துக் கொண்டார். "தளபதி விஜய்" என அவர்கள் சொன்னது ஸ்பீடிற்கு தெளிவாகக் காதில் கேட்கவில்லை. அது என்ன தலைவிதி தலைவிதி என சொல்கிறார்கள் என ஸ்பீட் மீண்டும் கேட்கிறார்.
Speed reaction 😂😂😂
— Batman (@coronako17) October 21, 2025
Chief minister of india Vijay 😂😂😂 pic.twitter.com/SL3XFaFmtk
எது தலைவிதியா?
ஸ்பீடிற்கு தலைவிதி என்றால் என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது. ஆனால், அவர்கள் தளபதி என சொன்னது இவருக்குத் தலைவிதி என கேட்டுள்ளது. இதனாலேயே என்ன சொல்கிறார்கள் எனப் புரியாமல் ஏன் தலைவிதி எனக் கத்துகிறார்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர் கொடுத்த ரியாக்ஷனும் கூட இப்போது டிரெண்டாகி வருகிறது.
அதிர்ச்சி கொடுத்த விஜய் ரசிகர்
பிறகு மீண்டும் காருக்கு அருகே வந்த அந்த இளைஞர்களிடம் என்ன சொல்கிறீர்கள் என ஸ்பீட் கேட்கிறார். அதில் ஒரு இளைஞர், "இந்தியாவின் முதல்வர் விஜய்" என சொல்லி ஸ்பீட்டிற்கு மட்டுமில்லை.. வீடியோவை பார்க்கும் எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏனென்றால் மாநிலத்திற்குத் தான் முதல்வர்கள் இருப்பார்கள். நாட்டிற்குப் பிரதமர் தான் இருப்பார். ஆனால், இரண்டையும் சேர்த்துச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்த விஜய் ரசிகர்.
தொடர்ந்து எங்களுடன் ஒரு பைக் ட்ரிப் போகலாம் வருகிறீர்கள் என அந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். இருப்பினும், பைக் பயணம் வேண்டாம் என அவர் மறுத்துவிட்டார். அதோடு அந்த வீடியோ முடிகிறது. இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் சூழலில், இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications