2 முறை தலைகீழாக சுத்திய பைக்.. பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் படுகாயம்! பதற வைக்கும் வீடியோ
சென்னை: சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். கோவையைச் சேர்ந்த இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் திரண்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்குக் கூட்டம் திரண்டது.

அப்படி அத்தனை பலாயோர்கள் மத்தியில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். இப்படி இவர் இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பவர். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட அதேநேரம் தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
பைக்: Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், அதிக சிசி கொண்ட பைக்ககளை மின்னல் வேகத்தில் சாலைகளில் ஓட்டுவார். அதை வீடியோவாகவும் எடுத்துப் பதிவிடுவார். இதுவே சர்ச்சைக்குக் காரணம்.. அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டி மிக வேகமாக பைக் ஓட்டும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்தியும் வந்தனர்.
இது ஒரு பக்கம் தொடர்ந்தாலும் தனது சாகச பயணங்களை இவர் நிறுத்தவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு இவர் மற்றொரு ஆன்லைன் பிரபலமான ஜி.பி. முத்துவை ஏற்றிக் கொண்டு பைக்கில் ஒரு ரவுண்டு சென்றார். அந்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இதுபோல பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், இதற்காக நீதிமன்ற படிக்கட்டிற்கும் ஏற வேண்டி இருந்தது. அதேநேரம் மற்றொரு பக்கம் இவரது பலோயர்களும் அதிகரித்தே வந்தனர். இதற்கிடையே அவர் மஞ்சள் வீரன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார்
விபத்து: இப்படித் தொடர்ந்து சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, அபாயகரமான பைக் ஸ்டண்ட்களை செய்வதை இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே வழக்கம் போல பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர் தனது சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய முயன்ற போது அவர் நிலைதடுமாறிய அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுகிறார். இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிகிச்சை: தாமல் ஊராட்சி பகுதியில் இந்த சாலை விபத்து நடந்த நிலையில், அவர் இப்போது அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்து குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய அவர் முயல்வதும், அப்போது நிலைநடுமாறி விழுவதும் பதிவாகியுள்ளது. வேகமாகச் சென்றதால் அவரது பைக் இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி அந்த பள்ளத்தில் விழுந்தது பதிவாகியுள்ளது.
மேலும், இரண்டு வீடியோக்களும் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு வீடியோ விபத்து நடக்கும் முன்பு எடுத்தது. அதில் அவர் அதிவேகமாக வீலிங் செய்வது பதிவாகியுள்ளது. அதேபோல அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவும் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் கையில் கட்டுடன் இருக்கும் டிடிஎஃப் வாசன் எழுந்து உட்காரவே சிரமப்படுகின்றார். இந்த வீடியோ வேகமாகப் பரவும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது பாலோயர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
#TTFVASAN got accident 😳😳😳 pic.twitter.com/f5IZH0KXQ8
— Priyanga Praveen (@mpravin003) September 17, 2023












Click it and Unblock the Notifications