கருப்பு திராவிடன்.. தமிழன்.. அப்பா இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் பதிலடியா? என்னங்க நடக்குது?
சென்னை: பிரதமர் மோடி பற்றிய இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றார்.

பாராட்டு
அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பு
இளையராஜா கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறி பாஜக இவருக்கு ஆதரவாக பேசியது. இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

யுவன் சங்கர் ராஜா
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இளையராஜா இப்படி கருத்து தெரிவித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா புதிய கருத்து ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நான் கருப்பு திராவிடன்.. நான் தமிழன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு கருப்பு டி ஷர்ட் அணிந்து, கைலி கட்டி இவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.

பதிலடியா?
யுவன் சங்கர் ராஜாவின் இந்த கருத்து தனது தந்தை இளையராஜாவிற்கு பதிலடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இளையராஜா பாஜகவை சேர்ந்த பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஆனால் பாஜக திராவிட கொள்கையை ஏற்றுக்கொள்வது கிடையாது. திராவிடர் என்ற கூற்றை டெல்லி பாஜக விரும்புவது இல்லை. இந்த நிலையில்தான் யுவன் சங்கர் ராஜா திராவிடன் என்று தெரிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

யுவன் மதமாற்றம்
முன்னதாக யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. தனது தாய் மறைவிற்கு பின் இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் இஸ்லாமிய பாடல்கள் சிலவற்றை தரமணி தொடங்கி மாநாடு படம் வரை இவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications