Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களத்தில் இறங்கிய யுவன்சங்கர் ராஜா.. துள்ளல் இசையுடன் வெளியானது ஃபார்முலா 4 கார் பந்தய தீம் பாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தீவுத் திடல் மைதானத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் இசையில் ஃபார்முலா கார் பந்தயத்தின் தீம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. துள்ளலான இசையுடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னையில் அண்ணா சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் பந்தயம் தீவுத் திடலில் தொடங்கவுள்ளது. அங்கிருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் வரை பந்தயம் நடக்கவுள்ளது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

formula 4 race formula 4 race chennai yuvan shankar raja 4

பந்தயத்துக்காக கார்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3.5 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள சர்க்யூட்டில் கார் பந்தயமானது நடைபெறுகிறது. தெற்காசியாவிலேயே நீளமான சர்க்யூட் இது என்பது குறிப்பிடத்தக்கது. கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் என மூன்று கிலோமீட்டர் தீவு திடலை சுற்றியுள்ள பகுதிகளில் பந்தயமானது நடக்க இருக்கிறது. இந்த கார் ரேஸை பொதுமக்களும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அனுமதி சீட்டும் விற்கப்பட்டு வருகிறது.

மின்விளக்குகள் பொருத்துவது, 8,000 பேர் கண்டு ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ரேஸ் கார்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தனியார் இடங்களிலும், அரசு அமைத்துள்ள பகுதிகளிலும் கார்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

கார் பந்தயத்தைப் பார்க்க வரும் பொதுமக்கள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை யூனிவர்சிட்டி, பீச் ஆகிய பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள், செல்லப்பிராணிகள், தீப்பற்றக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், விளம்பர பொருட்கள், தண்ணீர் பாட்டில், முட்டை போன்றவை, ஜாதி மத உணர்வுகளை புண்படுத்தும் பதாகைகள் விளம்பரங்கள், ஸ்ப்ரே பெயிண்ட் போன்றவற்றை பந்தயம் நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் தீம் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லைப் என்ற ரேஸ்ல... ஸ்பீடா போகணும் லாப்புல..' என துள்ளலாகத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா அதிரடியாக இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் பாடலை எழுதியுள்ளார்.

இந்த தீம் பாடலை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் யுவன் இசையமைத்துள்ள கார் பந்தயம் குறித்த முழு தீம் பாடலையும் யூடியூப் லிங்க்குடன் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+