"ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்".. பரபரப்பை கிளப்பிய யுவன், சாந்தானு டி ஷர்ட்.. கனிமொழி பாராட்டு!
சென்னை: தமிழ் திரை உலகில் பலர் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை.
திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

திரை உலகம்
இந்த நிலையில் தற்போது திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். நடிகர்கள், இசையமைப்பாளர்கள் இந்திக்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர். இளம் நடிகர்கள், பிரபலங்கள் பலர் இந்த டிரெண்டில் குதித்து உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.

யுவன் பரபரப்பு
இதற்காக யுவன் டீ சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் "ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் இந்த டி சர்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது. பலர் யுவனின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

வேறு யார்
யுவனுடன் நடிகர் சிரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. இவரின் டீ சர்ட் தனியாக இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டீ சர்ட்களை அணிந்துள்ளனர். மீண்டும் வேலையை ஆரம்பித்துவிட்டோம் என்று இவர்கள் டிவிட் செய்துள்ளனர்.

தமிழர்கள் வரவேற்பு
இவர்கள் இப்படி தமிழுக்காக குரல் கொடுப்பது பெரிய வைரலாகி உள்ளது. பலரும் இவர்களை பாராட்டி வருகிறார்கள். ஆனால் திடீரென இந்த டிரெண்ட் துவங்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் செயலை திமுக எம்பி கனிமொழி பாராட்டி இருக்கிறார்.

கனிமொழி பாராட்டு
சுவாரஷ்யமாக இருக்கிறது என்று யுவன் டி சர்ட்டை கனிமொழி பாராட்டி இருக்கிறார். இதற்கு அளித்த யுவன் ரொம்ப சுவீட் ஆப் யூ.. மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications