Zaheer Khan: பவுலிங்கில் எதிரணியை கலங்கடித்தவர்! சிஎஸ்கே பயிற்சியாளராகும் மும்பை எக்ஸ்பிரஸ்.. யார் இந்த ஜாகீர் கான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சில் கலக்கி வந்த முன்னாள் வீரரான ஜாகீர் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையும் பெற்ற ஜாகீர் கான் கிரிக்கெட் பயணம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அதிகம் ஆக்ரோஷம் காட்டாமல் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளும் ஜாகீர் கான், பயிற்சியாளர் பொறுப்பிலும் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Zaheer Khan Appoint CSK bowling coach bowler who once rattled opposing teams

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சிஎஸ்கே அணி கடந்த இரண்டு சீசன்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதையடுத்து, சென்னை அணிக்கு நீண்ட காலமாக பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீபன் பிளமிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் இணைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சில் கலக்கி வந்த முன்னாள் வீரரான ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜாகீர் கான் கிரிக்கெட் பயணம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

யார் இந்த ஜாகீர் கான்?

இந்தியாவுக்காக 92 டெஸ்ட் போட்டிகள், 200 ஒருநாள் போட்டிகள், 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார்.

ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர், மும்பை டெல்லி ஆகிய அணிகளுக்காக ஜாகீர் கான் விளையாடியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பிறகு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ஆனால் தலைமை பயிற்சியாளாராக அவர் பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

தோனியின் பரிந்துரை

அதன்பிறகு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக 2024 முதல் 2025 வரை பணியாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு இருந்தார். எனினும், அதே ஆண்டு ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டவுடன் பந்து வீச்சு ஆலோசகராக மாற்றப்பட்டார். 47 வயது ஆன ஜாகீர் கான் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

ஸ்டீபன் பிளமிங் பதவி விலகுவதாக அறிவித்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவியது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜாகீர் கான் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தோனியின் பரிந்துரையின் பேரிலேயே ஜாகீர் நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் ஆக்ரோஷம் காட்டாத வீரர்

பிளமிங் விலகியதால், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை தோனியிடம் சிஎஸ்கே நிர்வாகம் ஒப்படைத்ததாகவும், அமெரிக்கா சென்று இருந்த தோனி, நாடு திரும்பியதும் தொடர்ச்சியாக இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முன்னாள் வீரர்களுடன் ஆலோசித்த தோனி, ஜாகீர் கான் பெயரை டிக் அடித்துள்ளார். அதிகம் ஆக்ரோஷம் காட்டாமல் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளும் ஜாகீர் கான், பயிற்சியாளர் பொறுப்பிலும் வெற்றிக்கொடி நாட்டுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+