ரிஷப் பண்ட் மூலமாக ஜாகீர் கானிடம் பேசிய சிஎஸ்கே.. இறுதி முடிவை எடுத்த தோனி.. அஸ்வின் சொன்ன மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ள சூழலில், பல்வேறு ரகசியங்கள் வெளியில் வந்துள்ளது. ரிஷப் பண்ட் மூலமாகவே ஜாகீன் கானிடம் சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னாள் வீரர் அஸ்வின் பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் கொடுத்துள்ள நிலையில், பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுதொடர்பாக சிஎஸ்கே ஜாம்பவான் அஸ்வின் பேசுகையில், ஜாகீர் கானுக்கு ஓராண்டு மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் ஒப்பந்தம் கொடுத்துள்ளது.

Zaheer Khan

இதனை தான் நான் கூர்மையாக கவனிக்கிறேன். ஏனென்றால் ஓராண்டில் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை கட்டமைத்துவிட முடியாது. ஜாகீர் கான் மிகவும் ஸ்மார்ட் பயிற்சியாளர். சிஎஸ்கே அணிக்கு இந்த பயிற்சியாளர் நியமனம் எளிதாக இல்லை. ஏனென்றால் சிஎஸ்கே அணி பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புகள் குறைவு தான்.

ஆனாலும் சிறந்த தேர்வை செய்துள்ளது. நிச்சயமாக தோனி தான் இறுதி முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் மூலமாகவே ஜாகீர் கானுடன் பேசியதாக சொல்லப்படுகிறது. தோனியின் தோளில் கைகளை போட்டு பேசக் கூடிய நபர் ஜாகீர் கான். அதனால் தோனியின் முடிவுகளில் ஜாகீர் கான் எளிதாக உடன்பட வேண்டிய தேவையில்லை. அவரும் தன்னுடைய கருத்துக்களை கட்டாயமாக செய்வார்.

அதேபோல் ஜாகீர் கான் மூலமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் வேறு சில விஷயங்களை எதிர்பார்க்கும். அதாவது பிட்ச் எப்படி செயல்படுகிறது, நாவலூர் சிஎஸ்கே மைதானத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள், வீரர்களிடம் இருக்கும் டெக்னிக்கல் சிக்கல் உள்ளிட்டவற்றை ஜாகீர் கானால் எளிதாக மாற்ற முடியும். தோனிக்கும் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.

பயிற்சியாளர் மாறி இருப்பதால், கேப்டன்சியில் மாற்றம் வருமா என்பது தெரியவில்லை. சஞ்சு சாம்சனின் பெயரும் அடிபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் முழுமையாக என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. சிஎஸ்கே அணி 16 ஆண்டுகளாக ஒரு பயிற்சியாளருடன் பயணித்திருக்கிறது. தற்போது ஓராண்டுக்கு ஒரு பயிற்சியாளரை கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+