Zepto-வில் ஷூ ஆர்டர் செய்து ரிட்டர்ன் செய்த நபர்! பார்சலை பிரித்தால் ஊழியர் அதிர்ச்சி! நூதன மோசடி!
சென்னை: சென்னையில் ஜெப்டோவில் வாங்கும் பொருட்களை திருப்பி கொடுப்பதாக கூறி நூதன மோசடி செய்ததை அறிந்த டெலிவரி ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா சேவியோ என்பவர் ஜெப்டோ டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை வீடியோவாக பதிவிட்டு வந்தார்.

அது போல் தனக்கு ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர் கிடைத்தது என்பது குறித்தும் அவர் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் ஒரு புது வகையா மோசடி குறித்தும் பதிவிட்டுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
ஒரு நாள், நான்கு ஷூக்களை ஒருவர் ஆர்டர் செய்தாராம். டெலிவரி செய்த சில நிமிடங்களிலேயே அந்த ஷூக்களை திருப்பி (return) அனுப்பியுள்ளார்.புதிதாக வேலைக்கு சேர்ந்த டெலிவரி ஊழியர், அந்த பார்சலில் இருந்த ஷூக்களை சரிபார்க்காமல் வாங்கி வந்துவிட்டார்.
பிறகுதான் நிறுவனத்திற்கு கொண்டு சென்ற போது அதில் 4 செட் பழைய பிய்ந்து போன ஷூக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அது போல் அந்த நபர் தினமும் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்வது பிறகு பழைய பொருளை மாற்றி வைத்துவிட்டு ரிட்டர்ன் செய்வாராம்.
இதனால் அவருக்கு அந்த பொருளும் கிடைத்துவிடுகிறது. செலுத்திய பணமும் கிடைத்துவிடுகிறதாம். இது போல் அடிக்கடி நடந்ததால் டெலிவரி ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்கள் அந்த வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.
முதலில் அவர்கள் குறிப்பிட்ட பெயரில் யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு நீண்ட நேரம் ஊழியர்கள் கூச்சலிட்ட பிறகு ஒருவர் வந்து தான் ஏமாற்றவில்லை என்று சாதித்தார். எனினும் இதை நம்பாத டெலிவரி ஊழியர்கள் அவருடைய அறையை சோதனை செய்தனர்.
அப்போது, டேபிளுக்கு அடியில் நான்கு புதிய ஷூக்கள் இருந்தன. கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அந்த நபர், புதிய ஷூக்களை வைத்துக் கொண்டு பழைய ஷூக்களை ரிட்டர்ன் செய்து பணம் வாங்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதனை சூர்யா சேவியா வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
"பொருட்கள் சேதமடைந்திருந்தால் வாங்குபவர் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகத்தான் ரிட்டர்ன் செய்யும் வசதி உள்ளது. ஆனால், அதனை தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது வேதனை அளிக்கிறது" என்று டெலிவரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications