ஆர்டர் எடுத்தவர் இனி ஆர்டர்களில் கையெழுத்து போடுவார்.. TNPSC தேர்வில் வெற்றி பெற்ற சொமேட்டொ ஊழியர்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஊழியர் விக்னேஷுக்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சொமேட்டோவில் ஃபுட் ஆர்டர்களை எடுத்தவர் இனி அரசாங்க ஆர்டர்களில் கையெழுத்து போட இருக்கிறார்.
குடும்பச் சூழல் காரணமாக படிப்பை விட்டுவிட்டோ, படிக்கும்போது பார்ட் டைமாகவோ பல்வேறு பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் ஏராளம். ஸ்விக்கி, சொமேட்டோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஃபுட் டெலிவரி தளங்கள் பெருகிவிட்ட பிறகு ஏராளமான இளைஞர்கள், டெலிவரி பாய் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள் ஏராளமானோர், நகரங்களில் இருந்தபடி தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடிக்கொண்டே, ஃபுட் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பலரும், தங்கள் செலவுக்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி சொமேட்டோ ஃபுட் டெலிவரி ஆப்பில் டெலிவரி பாயாக உழைத்துக் கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ். இவர் சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இரவும், பகலும் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தங்கள் ஊழியர், மதிப்புமிக்க தேர்வுல் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக சொமேட்டோ நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. சொமேட்டோவில் டெலிவரி பார்ட்னராக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளது.
அதோடு, சொமேட்டோ ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஏராளமான நெட்டிசன்கள் விக்னேஷுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோவில் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்தவர், இனி இந்த அரசுப் பணி மூலம் ஆர்டர்களில் கையெழுத்து போடப்போகிறார் என நெட்டிசன் ஒருவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அந்தவகையில் சுமார் 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு விஏஓ, வரி வசூலிப்பாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications