சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க
சென்னை: சென்னை நகருக்குள் ஓடும் பேருந்துகளுக்கு டிக்கெட் எடுக்க சென்னை ஒன் என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மெட்ரோ ரயில்கள், பேருந்துகளுக்கு டிக்கெட் எடுக்க முடியும். இந்த நிலையில், சென்னை மாநகர பேருந்துகளுக்கு மாதாந்திர பஸ் எடுக்கும் போது 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பான கும்டா இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

சென்னை ஒன் செயலி
இதன்படி, சென்னை நகருக்குள் ஓடும் பேருந்துகளுக்கு டிக்கெட் எடுக்க சென்னை ஒன் என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மெட்ரோ ரயில்கள், பேருந்துகளுக்கு டிக்கெட் எடுக்க முடியும். நகர பேருந்துகளுக்குள் ஒட்டியிருக்க கூடிய வண்டியின் ரூட் எண்ணை பதிவிட்டு புறப்படும் இடம், செல்ல வேண்டிய இடத்தை பதிவிட்டால் போதும், டிக்கெட் கட்டணம் திரையில் தோன்றும்.
கூகுள் பே போன்ற யுபிஐ செயலி வழியாக டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும் உடனடியாக டிக்கெட் கிடைத்துவிடும். இந்த டிக்கெட்டை நடத்துநரிடம் காட்டிவிட்டு பயணிக்க முடியும். சில்லறை இல்லை என்று நடத்துநரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டியது இல்லை. உடனடியாக டிஜிட்டல் வடிவில் டிக்கெட் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால் சென்னையில் பயணிகள் இடையே இந்த சென்னை ஒன் செயலிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த செயலியை பயன்படுத்தும் பயணிகளுக்கு புதிய கேஷ்பேக் சலுகையை சென்னை ஒன் அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் பணி நித்தமாகவும் கல்வி, தொழில் காரணங்களுக்கு மாநரக பேருந்தில் அடிக்கடி பயணணம் செய்யும் பணிகளுக்காக மாதாந்திர பாஸ் பயண திட்டம் உள்ளது.
இதில் ரூ.1,000 செலுத்தி விருப்பம் போல பயணிக்க முடியும். சென்னை நகருக்குள் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும். அடிக்கடி பேருந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த வசதி பெரும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில்தான், சென்னை மாநகர பேருந்துகளுக்கு மாதாந்திர பஸ் எடுக்கும் போது 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்
இந்த சலுகையை பெற Chennai One App-ல் "Pass" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப Gold அல்லது Diamond பாஸைத் தேர்ந்தெடுக்கவும். பணத்தை BHIM App மூலம் செலுத்தவும். ₹50 உடனடி கேஷ்பேக் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்! கோல்டு பாஸ் என்பது ஏசி பேருந்துகளில் பயணிக்க முடியாது.
டைமண்ட் பாஸ் இருந்தால் ஏசி உள்ளிட்ட மாநகர பேருந்துகளிலும் பயணிக்க முடியும். ரூ.50 கேஷ்பேக் சலுகை முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications