சமையல் மாஸ்டராக மாறிய Ex ஐஏஎஸ் அதிகாரி! அலைமோதும் சாப்பாட்டு ரசிகர்கள்!
கொச்சி: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உணவகம் ஒன்றை திறந்து, அதில் அவரே சமையல் கலைஞராகவும் வேலை பார்த்து வருவது கேரள மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேரளா விதவிதமான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாத மாநிலம். அப்படி ஒரு சுவாரஸ்யமான செய்திதான் இது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மலையாள மக்கள் விரும்பி உண்ணக்கூடிய கடல் உணவகம் ஒன்றை தொடங்கி, சமையல்காரராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். என்னது? ஃபைல் பிடித்த கையால் சமையல் கரண்டி பிடிக்கிறாரா? என உங்களைப் போல ஆச்சரியப்படாத ஆட்களே இல்லை. ஆகவேதான், இவர் இன்று வைரல் மனிதராக வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.

அப்படி என்ன சமையல் கலை மீது இவருக்கு அவ்வளவு ஆர்வம்? கடந்த 2023 ஆம் ஆண்டு வரை கேரள மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான் இந்த அலி அஸ்கர் பாஷா. தற்போது இவர் கொச்சியில் மீ மீ என்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு என்று தனியாக ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
கொச்சி அருகே நெட்டூர் பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் காலை 7 மணிக்கு களைக்கட்டத் தொடங்கிவிடுகிறது. இங்கிருந்து தனக்குத் தேவையான சமையல் காய்கறி சாமான்களை வந்து வாங்குகிறார் பாஷா. அதன்பின்னர் சமையலுக்கு உகந்த பிரெஷ் ஆன மீன்களை வாங்குவதற்காக வைபீனில் உள்ள காளமுக்கு என்ற மீன்பிடித் துறைமுகத்திற்குப் போய் நேரடியாக வகை வகையான மீன்களை வாங்குகிறார்.
ஏதோ வாங்கினோமா? சமைத்தோமா? என்று இல்லை. வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் இவரது கை மணம் உள்ளது. மொத்தம் வாரத்தில் ஏழு நாட்களும் பாரம்பரிய கேரள பாணி மதியச் சாப்பாட்டை இவரது கடையில் வயிறு நிறைய ருசிக்கலாம். இந்த உணவகம் திறக்கப்பட்ட நான்கு மாதங்களில் உணவு பிரியர்களின் ஹாட் ஸ்பாட் ஆகியுள்ளது.
பொதுவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைப் போல இல்லாமல், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தச் சமையல் தொழிலில் இறங்கியுள்ளார் இந்த முன்னாள் அதிகாரி. 2004ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர். அதிகாரியாக வாழ்ந்து சலித்த பிறகு தனது சமையல் ஆர்வத்தைக் கையில் எடுக்க முடிவு செய்தார் இவர். கடையைத் தொடங்கி கல்லாவில் உட்கார்ந்து ஒரு முதலாளி போல இல்லாமல், இவரே சமையல் செய்து அசத்துவதுதான் ஹைலைட். இவரது சமையல் ருசியை தேடிப் பலர் வருகை தருகின்றனர்.

“நான் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய நாட்களில் சமைப்பது என்பது எனது விருப்பமாக இருந்தது. சர்வீஸில் இருக்கும்போதே என் வீட்டில் நானே சமைத்து சக ஊழியர்களுக்குப் பரிமாறுவேன். சீனியர் அதிகாரிகளே எனது சமையல் திறமையைப் பாராட்டிப் பேசியுள்ளனர்'' என்றார். ஆகவே இந்த உணவகத்தைத் திறப்பது இவருக்குக் கஷ்டமான காரியமாக இல்லை.
“கடந்த 2023 ஜூலையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, நான் ஒரு உணவகத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தேன். லாபம் ஈட்டுவதற்காக இல்லை. மக்களுக்குத் தரமான உணவை ஒரு நியாயமான விலையில் வழங்க வேண்டும் என்பதற்காகவே இதைத் தொடங்கினேன். அதுதான் எனது நோக்கம்” என்கிறார் பாஷா.
நீண்ட காலத்திற்கு ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து அதைத் திறந்த சமையலறையுடன் கூடிய ஒரு உணவகமாக மாற்றியுள்ளார். சுவையான உணவுகளை வழங்கியதால் பாஷாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கொச்சியின் வல்லார்பாடம் பகுதியில் 60 பேர் உட்கார்ந்து இதில் சாப்பிட முடியும், அவ்வளவும் பாரம்பரிய கேரள கடல் உணவுகள்தான்.
"உணவில் கலர் பொடிகளை சேர்ப்பதில்லை. சுவையைக் கூட்டுவதற்காக எந்த வித ரசாயன கலப்படமும் செய்வதில்லை. காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படுகின்றன. கொச்சியிலிருந்து மீன்கள் வருகின்றன. ஆலப்புழாவின் ஒனாட்டுக்கரா தேங்காய் உற்பத்தி மண்டிகளிலிருந்து வாங்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் சமைக்கிறோம்”என்கிறார்.
மதிய உணவு மட்டுமே வழங்கப்படும் உணவகம் மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணிக்கு மூடப்படுகிறது. "மீ மீ" என்றால் மீன்களைக் குறிக்கக் கேரளக் குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு பொதுவான மலையாள சொல்.
“எனது மைத்துனரின் குடும்பம் வசிக்கும் பெங்களூருக்கு கேரளாவிலிருந்து மீன்களை வாங்கி எடுத்துக்கொண்டு செல்வேன். அது வழக்கமாக மாறியது. அங்குள்ள குழந்தைகள் என்னை மீ மீ இக்கா (இக்கா என்பது மலையாள முஸ்லிம்கள் பெரியவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்) என்று அழைத்தனர். அதனால், கடைக்கு மீ மீ என்று பெயரிட்டேன்” என்றும் சொல்கிறார் பாஷா. “கடுமையாகப் படித்து காலிகட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாற்றில் முதல் மதிப்பெண் பெற்றேன்” என்று கூறும் பாஷா 1989 இல் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு நிர்வாகியாக தனது வேலையைத் தொடங்கியவர். 1993 இல் இவர் துணை ஆட்சியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 இல், ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications