கேரளாவில் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை.. கடைசியில் காத்திருந்த பெரிய ஷாக்
கொச்சி: கேரள மாநிலம் கண்ணூர் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரட்டத்தோடு பகுதியில் பாவலிப் புழா ஆற்றில் தடுப்பணை ஒன்று உள்ளது. சுங்ககுன்னு, ஒட்டப்லா பகுதியைச் சேர்ந்த லிஜோ ஜோஸ் (36) மற்றும் அவரது மகன் நெவின் (6) ஆகியோர் நேற்று முன்தினம் காலை குளிக்க சென்று இருக்கிறார். மாணவர் நெவின் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார்.

இருவரும் பாவலிப் புழா ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து வந்த நிலையில், லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார்.
அப்போது, சிறுவன் சேற்றில் சிக்கிய நிலையில், அவரை மீட்க சென்ற தந்தையும் சிக்கி உள்ளார்.
இந்த விபத்தில் இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லிஜோ ஜோஸின் மனைவி ஸ்டெபனா குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷிவானியா என்ற நான்கு வயது மகள் இருக்கிறார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications