புதருக்குள் 17 வயது சிறுமியை.. சீரழித்து.. வீடியோ எடுத்த கும்பல்.. இன்னொரு மணிகண்டனும் சிக்கினார்..!
மைனர் பெண்ணை சீரழித்த கும்பலின் இன்னொரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டான்
கோவை: சிறுமியை நாசம் செய்தவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.. 17 வயது சிறுமியை புதருக்குள் இழுத்து சென்று சீரழித்தவர்களில் இன்னொரு குற்றவாளி மணிகண்டனையும் போலீசார் கைது செய்துள்ளனர்!
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பள்ளி முடிந்து மாலை இருட்டும் நேரம் பார்க்கிற்கு வந்துள்ளனர்.

அப்போது அங்கு திடீரென வந்த 6 இளைஞர்கள், காதலனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை பார்க்குக்கு பின்பக்கம் புதர் போல இருந்த ஒரு காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் ஆடைகளை மிரட்டி கழட்டி வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணையும் சீரழித்துள்ளனர்.
இந்த 6 பேரில் மணிகண்டன் என்பவன்தான் முதலில் வன்கொடுமை செய்துள்ளான். ஒருவர் சிறுமியை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அந்த பகுதியில் அரங்கேறி உள்ளது. அது மட்டுமல்ல.. வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, "எங்களிடம் வீடியோ இருக்கு.. எப்ப கூப்பிட்டாலும் வரணும்" என்று சொல்லிதான் இவர்கள் அனுப்பி உள்ளனர்.
இறுதியில் அந்த பெண் உருக்குலைந்த நிலையில் தன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சொல்லி கதற, அதிர்ந்த பெற்றோர், உடனடியாக ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யவும், கார்த்தி, மணிகண்டன், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு கோவை மகளிர் கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, குற்றவாளிகள் இந்த 6 பேர் மீதும் போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் இன்னொரு குற்றவாளியான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.. வடவள்ளி புதிய தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் இந்த மணிகண்டன்.. வயது 29 ஆகிறது.. இவரையும் போலீசார் அன்றிலிருந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் மணிகண்டனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் முதல் குற்றவாளியான மணிகண்டனின் சொந்தக்காரர்தான் இந்த மணிகண்டன் என்கிறார்கள். இவரிடம் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
சிறுமியை சீரழித்தவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போவதால் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.. அதனால் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்குமா அல்லது முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்குமா என போலீசாரின் விசாரணை மும்முரமாகி வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications