ஸ்டீம் ஃபேசியல்.. வெந்துபோன 17 வயது கோவை சிறுவன் முகம்! போலீஸுக்கு போன பெற்றோர்
கோவை: கோவை மாவட்டத்தில் அழகு நிலையத்தில் நீராவி பிடித்த போது அங்கிருந்த ஊழியரன் அஜாக்கிரதையால் வெந்நீர் பட்டு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டதாக 17 வயது மாணவர் புகார் கூறியுள்ளார்.
Recommended Video
கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர். இவர் அங்குள்ள ராக் மென்ஸ் சலூன் என்ற ஆண்கள் அழகு நிலையத்திற்குச் சென்றார். இந்த கடையை சஞ்சய் தாஸ் நடத்தி வருகிறார்.
இவரது கடையில் வித்யாதரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு கடந்த 13 ஆம் தேதி 17 வயது சிறுவன் ஃபேசியல் செய்வதற்காக வந்துள்ளார்.

சிகிச்சை
இந்த சிகிச்சை முகத்தில் இறந்த செல்களை அப்புறப்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும். அப்போது கவனக்குறைவால் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் அந்த மாணவனின் முகத்தில் பட்டதால் வெந்தது. இதனால் மாணவன் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த ஊழியர் வித்யாதரன் இயந்திரத்தை நிறுத்தினார்.

கடை உரிமையாளர்
கடை உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். அப்போது சாதாரண மருந்தை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மேலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாலும் அதற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் உரிமையாளர் உறுதி அளித்திருந்தார்.

முகத்தில் காயம்
பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவனுக்கு முகத்தில் காயம் அதிகமானதை அடுத்து பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்கான பணத்தை உரிமையாளரிடம் கேட்ட போது அவர் கொடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது. சிறுவனின் தந்தையிடம் போனில் கொடுப்பதாக கூறிவிட்டு மறுத்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம்
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது விசாரணை நடத்தினர் மேலும் அந்த மாணவனின் பெற்றோர் கோவை மாநகர துணை ஆணையரிடம் புகார் கொடுத்தனர். ஆர்.எஸ்.புரம் போலீஸார் கடை உரிமையாள் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications