மைனர் பையன்.. 19 வயது பெண்ணின் ஈர்ப்பு.. திடீர்னு வீட்டை விட்டு ஓடிப்போய்.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
மைனர் காதலனை திருமணம் செய்ய முடியாத நிலைமை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது
கோவை: 19 வயது இளம்பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருந்தது.. அப்போது திடீரென மைனர் இளைஞர் வீட்டுக்கு ஓடிவிட்டார் இளம்பெண்... இறுதியில் பல ட்விஸ்ட்களுடன் இந்த விவகாரம் நடந்து முடிந்துள்ளது.
திருமண வயது ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்கிறது திருமணச்சட்டம்.. திருத்தப்பட்ட திருமண சட்டமோ ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21 வயது என்கிறது.
இருவீட்டார் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், பெரும்பாலும் சட்டப்படியே நடக்கிறது... ஆனால் காதலர்கள், காதலிக்கும்போது வயது வித்தியாசம் ஏதும் பார்ப்பதில்லை... பெற்றோர் எதிர்ப்பால் தாங்கள் பிரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கோவை
இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கோயம்புத்தூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்த 19 வயது இளம் பெண்.. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமானார். அவருக்கு 20 வயதாகிறது.. ஆரம்பத்தில் நட்புடன் பழகினர்.. நாள் ஆக ஆக இது காதலாக உருவெடுத்தது.. இருவருமே மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.

கரூர்
இந்நிலையில் பெண்ணிற்கு வீட்டில் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்துள்ளனர்.. இந்த பெண்ணிற்கோ அந்த திருமணத்தில் விருப்பமில்லை.. அதனால் பெற்றோரின் கட்டாய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கடந்த 10ம் தேதி விட்டை விட்டு வெளியேறி, கரூரில் உள்ள காதலன் வீட்டிற்குள் தஞ்சமடைந்தார். அத்துடன், நேற்று முன்தினம் இரவு கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தனக்கு பாதுகாப்பு கேட்டு மனுவும் அளித்தார்.

விசாரணை
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இரவு நேரம் என்பதால், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க முடியாது என்பதால் பெண்கள் காப்பகத்தில் அவரை தங்க வைத்தனர்.. பிறகு விடிந்ததும் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதனிடையே, மகளை காணோம் என்று பெற்றோர் பதைபதைத்து போய்விட்டனர்.. எங்கெல்லாம் தேடியும் கிடைக்காததால், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.. அதற்குள் கரூர் மகளிர் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அந்த இளம்பெண் அழைத்து வரப்பட்டார்.. அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மைனர்
இளம் பெண் மேஜர் என்பதால் அவரின் விருப்பத்தின் பெயரில் காதலனுடன் அனுப்பி வைக்க முடிவானது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது, காதலனுக்கு 20 வயசுதான் ஆகிறதாம். மைனர் என்பதால் அவருடன் வாழ முடியாத நிலைமை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது... இவர்கள் திருமணமும் செய்யாததால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்..

பெற்றோர்
கடைசியாக பெண்ணை காணவில்லை என அவர்களது பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளதால், அந்த காவல் நிலையத்தில் ஆஜர்படுத்த பெண் காவலர்களின் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைத்தனர். காதலனுக்கு திருமண வயது வராததால், இளம்பெண்ணின் திருமணம் நின்றுவிட்டது.. இப்போது பெற்றோருடன் அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications