ஒரே பைக்கில் 3 பேர்.. டயர் வெடித்து விபத்து.. தூக்கி வீசப்பட்டதில் இரு மாணவர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் சிக்கியதில் அதன் டயர் வெடித்து இரு பள்ளி மாணவர்கள் பலியாகிவிட்டனர்.

கோவை போத்தனூர் சாலை சாய் நகரைச் சேர்ந்தவர் ஆஷிக் பாட்ஷா. இவரது நண்பர்கள் முகமது நசீர் மஸ்தான், முகமது அஸ்கர். இவர்கள் 3 பேரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.

2 Out of 3 students died in a accident in Coimbatore 2 Out of 3 students died in a accident in Coimbatore

நேற்று இரவு 12 மணி அளவில் மாணவர்கள் 3 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் இவர்கள் 3 பேரும் பயணித்துள்ளனர். அப்போது ஆற்று பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி சென்றனர்.

ஆசிக் பாட்ஷா இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். மற்றவர்கள் பின்னால் அமர்ந்து சென்றனர். போத்தனூர் சாய் நகர் சந்திப்பு அருகே சென்றபோது சாலையில் நடுவே உள்ள பள்ளத்தில் இவர்களது பைக் விழுந்தது.

அந்த வேகத்தில் பின் டயர் வெடித்தது. வாகனத்தில் சென்ற 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த முகமது நசீர் சம்ப இடத்திலேயே விழுந்தார். உயிருக்கு போராடிய ஆஷிக் பாட்ஷா, முகமது அஸ்கர் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது செல்லும் வழியில் ஆஷிக் பாட்ஷாவும் உயிரிழந்தார். பின்னர் முகமது அஸ்கருக்கு அரசு மருத்துவமனையிஸ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+