கோவையில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்.. அலர்ட்டான அதிகாரிகள்
கோவை: கோவை மாவட்டம் முழுவதுமே தெரு நாய்கள் மூலம் ஏற்படும் பிரச்சனை அதிகளவு உள்ளது. மக்கள் சாலையில் நடமாடுவதற்கே பயப்படுமளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் மட்டும் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெரு நாய்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாய்கள் கடிப்பது, சாலையில் வாகனங்களின் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்துவது போன்ற பாதிப்புகள் அதிகம் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தெரு நாய்களின் பாதிப்பு மிக அதிகளவு உள்ளது.

14 ஹாட்ஸ்பாட்கள்
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கணக்குப்படி, கோவை மாநகரில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. ரேபிஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வு அமைப்புகளுடன் இயங்கி பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக உதவி மையத்தையும் மாநகராட்சி அறிவித்திருந்தது. மக்கள் புகார் அடிப்படையில் மாநகர பகுதிகளில் தெரு நாய் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதியை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 14 இடங்கள் கண்டறியப்பட்டன. அங்கு கடந்த 4 மாதங்களாக 49 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்றும் மக்களை அச்சுறுத்தி வந்த ஆக்ரோஷமான நாய்களாகும். இந்த நாய்களை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டன.
25 நாய்களுக்கு ரேபிஸ்
அவற்றில் 4 நாய்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தி சாலையில் விடப்பட்டன. மீதமுள்ள நாய்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த நாய்கள் பிடிக்கப்பட்ட 4-10 நாட்களிலேயே இறந்துவிட்டன. தன்னார்வலர்கள் உதவியுடன் இறந்த நாய்களின் மூளையில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் உயிரிழந்த 45 நாய்களில் 25 நாய்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "ரேபிஸ் உதவி மையத்திற்கு 326 அழைப்புகள் வந்தன. இவற்றில் நீலாம்பூர் வெள்ளாணைப்பட்டி, இருகூர், பட்டணம், புலியகுளம், ராமநாதபும், விளாங்குறிச்சி, கணுவாய், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகள் ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்து தான் சீரான இடைவெளியில் நாய்கள் பிடிக்கப்பட்டன.
உதவி எண்
ஜூன் மாதம் 3, ஜூலை மாதம் 8, ஆகஸ்ட் மாதம் 5, செப்டம்பர் மாதம் 9 நாய்களுக்கு ரேபிஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும் எண்ணிக்கை தான். இருந்தபோதும் அதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை. தீவிர நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் 9843789491 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்." என்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் பவண்குமார் கிரியப்பனவர் கூறுகையில், "ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகிறோம். புகார்கள் அதிகம் வரும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முகாம்கள் நடத்தி வருகிறோம். மாநகர மற்றும் கிராமப் பகுதிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன." என்றார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications