Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் சிக்கிய நடிகை.. யார் அந்த சென்னை சினேகாஸ்ரீ.. வில்லங்க வேலை செய்யும் மேஜர் நெட்வர்க்

Subscribe to Oneindia Tamil

கோவை: இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்த புகாரில் துணை நடிகை, நடிகர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கோவை போலீசார் தீவிரமாக ரோந்து நடத்தி வருகிறார்கள். சந்தேகத்திற்கு இடமானவர்களை குறிவைத்து அடிக்கடி வாகன சோதனையும் நடத்துவார்கள். அந்த வகையில் கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Coimbatore actress

அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கும்பலிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் யார் என்பது குறித்தும், இது எப்படி வந்தது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த யாசிக் இலாஹி (வயது 26), போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்த மரியா (31), கரும்புக்கடை சாரமேடு திப்புநகரை சேர்ந்த முஜிப் ரகுமான் (27), ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பூச்சி கிருஷ்ணன்(24), சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சினேகாஸ்ரீ(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஐந்து பேரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தார்கள். இவர்களில் மரியா என்பவர் சினிமா துணை நடிகையாகவும், யாசிக் இலாஹி துணை நடிகராக இருப்பது தெரியவந்தது.

கைதான 5 பேரிடம் போதை பொருள் எப்படி கிடைத்தது என்பது குறித்து நடத்திய விசாரணையில் போதை மருந்து கடத்தலில் கோவையை சேர்ந்த அப்துல் கலாம், ஆசிப் ஷெரீப், ரிஸ்வான், வட மாநிலத்தை சேர்ந்த சச்சின் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைதான கும்பல் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து அதனை போதை மாத்திரைகளாக கூடுதல் விலைக்கு விற்றுவருவது தெரியவந்தது. மேலும் இவர்கள் கஞ்சா கும்பலுடனும் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் மூலம் கஞ்சா பெற்று, அதனையும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் யார் என்பதும் அந்த நெட்வொர்க் குறித்தும் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+