கோவை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த இரண்டு நாள் தான்..மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
கோவை: கோவையில் சொத்து வரியை வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொத்து வரியை உரிய காலத்தில் வசூலிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மாநகராட்சிகள் சார்பில் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி சொத்துவரியை வசூலிக்க முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "2023-24ம் நிதியாண்டில் 2வது அரை ஆண்டுக்கான சொத்து வரியை வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகைகளை செலுத்த வேண்டும்.
இதற்கு வசதியாக இன்று (சனிக்கிழமை) நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 56 மற்றும் 57வது வார்டுகளுக்கு ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்தில் 2 நாட்களும், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 34 வார்டுக்கு மஞ்சீஸ்வரி காலனி விநாயகர் கோவில் வளாகத்தில் நாளை மட்டும் முகாம் நடத்தப்படும்.
39வது வார்டு கண்டப்பாளையம் பெருமாள் கோவில் வளாகத்தில் இன்றும், 75வது வார்டு சீரநாயக்கன் பாளையம் நேதாஜி சாலை மாரியம்மன் கோவில் வளாகத்தில் 2 நாட்களும் வரி வசூல் முகாம் நடைபெறும். தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 93வது வார்டு சர்ச் வீதி மாநகராட்சி சமுதாய கூடத்தில் மற்றும் 99வது வார்டு ஸ்ரீராம் நகர்,6வது வீதியில் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டு ஜனதா நகர் ஆரம்ப பள்ளியிலும், 28வது வார்டு இளங்கோ நகரில் மாநகராட்சி வார்டிலும், 25வது வார்டு காந்திமாநகர் உயர்நிலைப்பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடத்தப்படுகிறது.
மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 32 வது வார்டு நாயராணசாமி வீதியிலும், 63வது வார்டு பெருமாள் கோவில் வீதியிலும், 80வது வார்டுகெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் 2 நாட்கள் முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்கள் மற்றும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications