Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் ஹோட்டலில் அழகான பெண்.. ஆசைஆசையாய் நுழைந்த இளைஞர்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. அதென்ன வெப்செட்?

பெண்ணுடன் ஜாலியாக இருக்கலாம் என்று சொல்லி பணம் பறித்த கும்பலை போலீசார்தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால், ஸ்டார் ஹோட்டலில் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கலாம் என்றார்களாம்.. அதை நம்பி பணத்தை கட்டி உள்ளார் ஒரு இளைஞர்.. அங்கேதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 22 வயது கல்லூரி மாணவர்.. இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

 800000 rs cheating in Coimbatore Star Hotel and what happened to the College Student

அவரது புகாரில் ''நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

வெப்சைட்டில் தேடினால், அழகான பெண்கள் கிடைப்பார்கள் என்று என் நண்பர் சொன்னார்.. அதனால், நான் லோகாண்டோ என்ற இணையதளத்திற்கு சென்று, உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடினேன். அதில் சில அழகான பெண்களின் கவர்ச்சி படத்துடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால், முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் ஸ்டார் ஓட்டலில் பாதுகாப்பாக ஜாலியாக இருக்கலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது..

அதனால், அதில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.. அதில் பேசிய நபர் தன்னை, குமார் என்று அறிமுகம் செய்து கொண்டார். பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாகவும், அங்கு உல்லாசமாகவும் இருக்கலாம் என்றும் கூறினார். பிறகு, சில பெண்களின் ஆபாச போட்டோக்களையும் எனக்கு அனுப்பினார்... அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்..

இதனையடுத்து, அந்தப் பெண் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்ப வேண்டும் என்றார்.. ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், பணத்தை உடனே அனுப்பி வைத்தேன். பிறகு பீளமேட்டில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் அட்ரஸை கூறினார்.. அங்குள்ள அறையில்தான், இளம்பெண் காத்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். இதனையடுத்து நான் அங்கு சென்றேன்... பெண் எந்த ரூமில் இருக்கிறார், அந்த ரூம் நம்பர் என்ன? என்று ஹோட்டலில் இருந்து கொண்டு கேட்டேன்...

அதற்கு அவர், அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, ரூமுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார். போலீசுக்கு ரூ.7.84 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி என்னிடம் இருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப சொன்னார்.. இவ்வாறாக அவர் என்னிடம் இருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தை பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அதன் பிறகு, அவரது போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது, அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அதனால் ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து, என்னுடைய பணத்தை மீட்டு தரவேண்டும்'' என்று அந்த புகார் மனுவில் வலியுறுத்தி இருந்தார். கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாகவே, ஆன்லைன் மோசடிகள் பெருகி வருவதுடன், இதை வைத்து பணம் பறிப்பதும் அதிகமாகி வருகிறது.. திருமண வரன்கள் முதல் வேலைவாய்ப்புகள், பெண்களுடன் ஜாலியாக இருப்பது வரை அனைத்துக்கும் தனித்தனி வெப்சைட்கள் இயங்கி வருகின்றன.

இந்த வெப்சைட்களின் கவர்ச்சி விளம்பரங்கள், அவர்கள் பேசும் விதம், போன்றவைகளில் வாடிக்கையாளர்கள் விழுந்து விடுவதுடன் வாழ்க்கையும் சேர்ந்து தொலைந்து கொண்டிருக்கிறது.. இதுபோல் வாட்ஸ்அப்களிலும் போலி க்ரூப்கள் உருவாக்கப்பட்டு, கிரிமினல்கள் வலம் வருகின்றனர்..

சென்னையில் முருகப் பெருமான், கவியரசன் என்ற 2 பேர் வாட்ஸ்அப்பில் ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டு, அழகான பெண்கள், துணை நடிகைகள் மற்றும் பிரபல நடிகைகளின் போட்டோக்களை பல இளைஞர்களுக்கு அனுப்பி விபச்சாரத்துக்கு அழைத்த நிகழ்வும் நடந்துள்ளது.. அதனால்தான், மலிவான ஆசைகளுக்காக யாரும் விபரீதத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள், கவனமாக இருக்க வேண்டும் காவல்துறையினர் பொதுமக்களை விடாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார்கள்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+