கோவை வாலிபர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவை.. உதவுங்களேன்!
கோவை: கோவையில் கேஎம்சிஎச் மருத்துவமனையில் 36 வயது நிரம்பிய ஆணுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய 40 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. நீங்கள் மனம் வைத்தால் ரத்த தானம் செய்து அவருக்கு உதவி செய்ய முடியும்.
கோவை சிவில் ஏரோட்ரோமில் கேஎம்சிஎச் (KMCH) மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கோவை மற்றும் சுற்றுவட்டார மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் 36 வயது நிரம்பிய ஆண் ஒருவர் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். அவரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

தற்போது கிட்னி பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. இதனால் உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு 40 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ஒரு யூனிட் முதல் 5 யூனிட் வரையிலான ரத்தம் என்றால் உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலம் எளிதாக பெற்று கொள்ளலாம். ஆனால் 40 யூனிட் ரத்தம் என்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் சார்பில் ரத்த தான உதவி கோரப்பட்டுள்ளது. ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மனது வைத்தால் 40 யூனிட் ரத்தம் என்பது எளிதாக கிடைக்கும். அதோடு அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடக்கும்.
இதனால் ரத்த தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் உதவிட வேண்டும் என கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர் கேட்டுள்ளார். உங்களின் இந்த ரத்த தானம் அவருக்கு பேருதவியாக இருக்கும். அதன்படி ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏ1, ஏ2 ரத்த குரூப்பை சேர்ந்தவர்கள் ரத்த தானம் அளிக்கலாம். ரத்த தானம் செய்ய ஆர்வமாக இருப்பவர்கள் 9791600764, 9677784228 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். கிட்னி பாதிப்பில் உள்ள நபரின் Reg No: 1961717.












Click it and Unblock the Notifications