கோவை புத்தக திருவிழாவில் காவி திருவள்ளுவரால் சர்ச்சை- அடேங்கப்பா விளக்கம் கொடுத்த ஆட்சியர்!
கோவை: கோவையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் காவி உடையுடனான திருவள்ளுவர் படம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கோவை கொடிசியா அரங்கில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை கோவை மாவட்ட நிர்வாகம் நடத்தியது.

இப்புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 5,000 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக திருக்குறள் புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது. இப்புத்தகம்தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்ததுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம். ஏற்கனவே வலதுசாரி இந்துத்துவா அமைப்பினர் திருவள்ளுவரை இந்து எனக் கூறி அவருக்கு காவி சாயம் பூசி பஞ்சாயத்தை கூட்டி இருந்தனர். தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படத்தையும் வலதுசாரிகள் இப்போதும் ஏற்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட அரசு நிர்வாகமே காவி திருவள்ளுவர் புத்தகத்தை கொடுத்ததால் திராவிடர் இயக்க, தமிழர் இயக்க ஆர்வலர்கள் கோபமடைந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆட்சியர் சமீரன் அளித்த பதில் மேலும் சர்ச்சையாகி இருக்கிறது. காவி திருவள்ளுவர் குறித்து ஆட்சியர் சமீரன் கூறியதாவது: திருக்குறள் வாசிப்பில் 5000 மாணவர்கள் 20 குறட்பாக்களை படித்தனர். இது திருக்குறள் வாசிப்பை ஊக்கப்படுத்தக் கூடியது.
இப்புத்தக வாசிப்பில் பங்கேற்ற அனைவருக்குமே திருக்குறள் புத்தகம் தரப்பட்டது. புத்தகத்தின் அட்டை என்ன நிறம் என பார்க்காமல் உள்ளே என்ன இருக்கிறது என் பாருங்கள். நான் உள்ளே என்ன இருக்கிறது என்றுதான் பார்க்கிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications