ஜனகராஜ் முதல் சுருளிராஜன் வரை.. அசோகன் முதல் நம்பியார் வரை.. மிமிக்ரி செய்து அசத்திய கோவை குணா
பழங்கால நடிகர் அசோகன் முதல் எம்.என்.நம்பியார் வரை அனைத்து வில்லன்களையும் கண் முன் கொண்டு வரும் அசாத்திய திறமை படைத்தவர் கோவை குணா
கோவை: பழங்கால நடிகர் அசோகன் முதல் எம்.என். நம்பியார் வரை அனைத்து வில்லன்களின் குரல் மட்டும் இல்லாமல் அவர்களுடைய பாடி லேங்குவேஜையும் கண்முன்னே கொண்டு வருபவர் கோவை குணா.
சன் தொலைகாட்சிகளில் 1990 களில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவர் தனது உடல் மொழியாலேயே சிரிப்பை வரவழைத்தவர்.
இவர் சென்னை காதல் எனும் படத்தில் நடித்துள்ளார். கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரானார். இவர் கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றார்.

உடல் மொழி
இவர் தனது உடல் மொழியாலேயே நடிகர்களை கொண்டு வந்துவிடுவார். இவர் யார் பெயரையும் சொல்லாமலேயே இந்த நடிகர்தான் என சொல்லும் அளவுக்கு அவருடைய பாடி லாங்குவேஜ் இருக்கும். அது போல் மிமிக்ரியில் யாரும் யோசிக்காத அளவுக்கு வித்தியாசமான விஷயங்களை செய்து முடித்து விழா ஜட்ஜ்களிடமும் அப்லாஸ் வாங்கிவிடுவார்.

ரஜினிகாந்த்
ஒரு முறை இவர் கவுண்டமணி, ரஜினிகாந்த், பாக்யராஜ், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் வாய்ஸ்களை அப்படியே நிறுத்துவார். இவரது நிகழ்ச்சியை காண வரும் சினிமா பிரபலங்கள் கண்களை மூடி கேட்டால் அவர்கள்தான் வந்துவிடுவார்களோ என நினைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். இவர் ஜனகராஜின் வாய்ஸ் பேசினால் அப்பப்பா... ஜனகராஜின் மறு உருவம் என நினைக்க தோன்றும்.

வில்லன் நடிகர்கள்
அது போல் வில்லன் நடிகர்களான அசோகன், நம்பியார். மனோகர், எம்.ஆர்.ராதா உள்ளிட்டோரின் வாய்ஸ்களையும் பேசியிருந்தார். அசோகன் வாய்ஸ் எல்லாம் வெகு சிலர் மட்டுமே முயற்சிப்பர். அது போல் கோவை குணா மேடைக்கு வந்துவிட்டால் வரும் விருந்தினர் யாரை மாதிரி பேச சொல்கிறாரோ அவரை போல் உடனே பேசிவிடுவார்.

சுருளி ராஜன்
முடியாது என்பதே அவருடைய அகராதியில் இல்லை. கவுண்டமணியை அப்படியே பாடி லாங்குவேஜில் கொண்டு வந்து சிரிக்க வைத்துவிடுவார். கவுண்டமணி இந்தி டயலாக் பேசினால் எப்படி இருக்கும் . அதே டயலாக்கை சுருளிராஜன், அசோகன், நம்பியார் பேசினால் எப்படி இருக்கும் என தத்ரூபமாக காட்டுவார். இவர் நிகழ்ச்சிக்கு வந்தாலே சிறிது நேரத்திற்கு ரசிகர்களின் கரகோஷம் நிற்காது.

கோவை அரசு மருத்துவமனை
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா இன்று மாலை உயிரிழந்தார். இவருடைய மறைவு ரசிகர்களும் சின்னத்திரையுலகிற்கும் பெரும் இழப்பு. அண்மையில் மயில்சாமி உயிரிழந்த போது மிமிக்ரி கலைஞர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வில் கோவை குணாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications