ஓய்வூதியம் பெறுவதில் பிரச்சனையா?.. கோவை ராணுவ வீரர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. நாளைக்கு மறந்துடாதீங்க
கோவை: ஸ்பர்ஷ் மூலமாக பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முப்படைகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் சார்ந்த குறைகளை சரிசெய்யும் வகையில் அவிநாசி சாலை, நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கத்தில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்க முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு பத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் உடன் நேரில் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளதாவது: 'SPARSH (ஸ்பர்ஷ்)' மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகத்தின் சார்பில் 'SPARSH (ஸ்பர்ஷ்)' ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
இந்த முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோயம்புத்தூர், நவ இந்தியா பேருந்து நிலையம், அவிநாசி சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, எஸ்என்ஆர் கலையரங்கத்தில் (Sri Ramakrishna College of Arts & Science, SNR Auditorium, Nava India Bus Stop, Avinashi Road) நடைபெற உள்ளது. இதில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன், IDAS தலைமை வகிக்கிறார்.
உயிர் சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஓர் ரேங்க், ஓர் பென்ஷன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் தங்களது படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு பத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் உடன் நேரில் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பை ஒய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications