அடி உதை… கோவையில் விசிக நிர்வாகி மீது புகாரளித்து தற்கொலைக்கு முயன்ற அஞ்சல் ஊழியர்!
கோவை: கோவையில் இடத் தகராறு காரணமாக மகள்களை ஆபாசமாகப் பேசி, தன்னை அடித்து உதைத்த விசிக நிர்வாகி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அஞ்சல் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ், அங்குள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவருக்கும், அற்புதராஜுக்கும் இடப்பிரச்சனை எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இடப்பிரச்சினை தொடர்பாக ஜார்ஜ் குப்புசாமி அடிக்கடி அற்புதராஜுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஆபாசமாக பேசி தாக்கியுள்ளதாக அற்புதராஜ் கூறியுள்ளார்..மேலும், அற்புதராஜின் 2 மகள்கள் மற்றும் மகனை விசிக நிர்வாகி ஆபாசமாகப் பேசியதோடு, தாக்கியதாகவும், அற்புதராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் பலமுறை புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 15ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அற்புதராஜ் இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, தான் மறைத்து வைத்திருந்த, பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அற்புதராஜ் மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசிக நிர்வாகி மீது புகாரளித்து அஞ்சல் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications