கோவை மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளையும், நாளை மறுநாளும் தவறவிட்டுறாதீங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் எளிமையாக சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நவம்பர் 16 மற்றும் 17 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

coimbatore corporation

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.

மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நவம்பர் 9, 10 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: வார்டு எண் 5க்கு வல்லியம் பாளையம், மாநகராட்சி பள்ளியிலும், வார்டு எண் 7க்கு நேரு நகர், பேருந்து நிறுத்தம் அருகிலும், வார்டு எண் 35க்கு கற்பக விநாயகர் கோவில், தேவாங்க வீதி, இடையர்பாளையத்திலும் (நவம்பர் 16, சனிக்கிழமை மட்டும்) நடைபெறவுள்ளது.

வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் திடல், சீரநாயக்கன்பாளைத்திலும் (நவம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 10க்கு சென்ட்ரல் பார்க் அப்பார்ட்மெண்ட், சக்தி ரோடு, சரவணம்பட்டியிலும், வார்டு எண் 86க்கு ஆரம்பப்பள்ளி, அறிஞர் அண்ணா காலனி, கரும்புகடையிலும், வார்டு எண் 88க்கு பழனி ஆண்டவர் கோவில் மண்டபத்திலும், தால் போக்ட்ரி வீதி, குனியமுத்தூரிலும் நடைபெறுகிறது.

வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும், வார்டு எண் 32க்கு சுண்டக்காமுத்தூர் சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும், வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, கோயம்புத்தூர் மாநகராட்சி, யூ கலெக்ஷன் சென்டரிலும், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனி பகுதியிலும் முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16, 17) ஆகிய இரண்டு நாட்களிலும் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+