யார்ரா அந்த பையன்.. பிரஸ்மீட்டில் பேசிய வானதி.. விஜய் போட்டோவை கேமராவில் காட்டி இளைஞர் செய்த சம்பவம்
கோவை: கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டிய சம்பவம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக சித்தாந்த எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி களேபரத்தையும் உண்டாக்கியிருந்தார்

மாநாட்டில் விஜய் பேசிய பல்வேறு கருத்துகள் தமிழக அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாசிசம் குறித்து விஜய் பேசிய கருத்தும் சர்ச்சையானது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மாநாடு நடந்து பல நாட்களுக்கு மேலாகியும் இன்றும் விஜய் தொடர்பான கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கட்சியை வலுப்படுத்துவதற்காக டிசம்பர் மாதம் முதலே விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க உறுப்பினர் சேர்க்கை பணியை ஜெட் வேகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என தனி செயலியை நடிகர் விஜய் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார். தவெக மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செயலி மூலமாக பலரும் தவெகவில் உறுப்பினர்களாக ஆர்வம் காட்டி வருவதால் தவெக சர்வரே அடிக்கடி முடங்குவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மண்டல வாரியாக விசிட் அடிப்பதற்கு முன்பு மக்களிடம் ஆதாரத்துடன் பிரசாரம் செய்யும் வகையில், திமுக, அதிமுக கட்சிகளில் ஊழல் பட்டியலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரஸ் மீட்டில் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கோவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ஆவேசமாக வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தபோது தனது செல்போனில் விஜயின் புகைப்படத்தை இளைஞர் கேமரா முன்பு காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பின்னால் பாஜக கட்சியினர் சில பேர் நிற்கின்றனர். அப்போது, அவரது பின்னால் நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென தனது செல்போனில் இருந்து விஜய் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெகவினர் பலரும் இளைஞரின் தரமான சம்பவம் என்று போஸ்ட் போட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும், நகைச்சுவையாகவும் பல்வேறு கமெண்ட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications