கோவையில் ஸ்கூட்டரில் வந்த கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம் தந்த இளைஞர்.. என்ன நடந்தது?
கோவை: கோவையை சேர்ந்த 20 வயதான இளம்பெண், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அவர் தனது ஸ்கூட்டரில் அண்மையில் குனியமுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை குண்டும் குழியுமாக இருந்ததுள்ளது. இதனால் முன்னாள் சென்ற , இளைஞரின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் மாணவி லேசாக சிரித்தபடி மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் நடுரோட்டில் அந்த மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
கோவையைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்றபோது அங்கு சாலை குண்டும் குழியுமாக இருந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக
'கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறியது. திடீரென அந்த வழியாக சென்ற இளைஞரின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி சமாளித்துக் கொண்டு. ஸ்கூட்டரில் வந்த இளைஞரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றாராம்.

உடனே அந்த இளைஞர், மோதலை மறந்து விட்டு, அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன்சென்று, தடுத்து நிறுத்தியிருக்கிறார். பின்னர் அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த மாணவியின் கையை பிடித்து, கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சலிட்டாராம். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் வாகனத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இது குறித்து அந்த மாணவி, கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிக்கு முத்தம் கொடுத்தது கோவைப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 32 வயதாகும் முகமது கைஃப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த மாணவி, சம்பவம் நடந்த அன்று சிரித்தபடி பேசியதால், அதை தவறாக எடுத்துக்கொண்டாராம். பின்தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமதுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதுடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications