ஆவின் கடைக்கு விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் குட்நியூஸ்! அமுல் குறித்த கேள்விக்கு கொடுத்த ரியாக்ஷன்
கோவை: மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்த அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். மேலும் அமுல் நிறுவனம் பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆவின் நிர்வாகம் முன்னேற்றத்தை நோக்கி சென்று வருகிறது. கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தொய்வுநிலை மாறி தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அத்துடன் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தவும் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை உள்ளது. மேய்ச்சல் நிலம், விவசாயிகளின் நிலங்களில் தீவன பயிர்களை பயிரிடவும், ஊறுகாய் புல் என்ற தீவன பயிரை அதிகமாக விலைச்சல் செய்து, மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டமும் முதல்கட்டமாக ஈரோட்டில் கொண்டு வர உள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நெய் போன்ற பொருட்கள் நீண்ட நாட்கள் தாங்கக்கூடிய குணம் உள்ளிட்டவைகள் பற்றி ஆராய்ந்து புதிய வியூகங்களை வகுத்து வருகிறோம். தமிழகத்தில் காளை கன்றுகளுக்கு உழவு, உணவு ஆகியவைகளுக்கு மிக தேவை உள்ளது.
கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில், நமது நாட்டு மாடுகள் 5-6 லிட்டர் தருகிறது. இதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். அதற்காக தான் நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.
20 லட்சம் கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசிவழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அமுல் நிறுவனம் விவாதத்திற்கான பொருளே கிடையாது. உலகமயமாக்கலுக்கு பின் எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். நமது பொருட்களுக்கு தேவையும், மக்கள் வரவேற்பு உள்ளதால் அதுகுறித்து கவலைக்கொள்ள தேவையில்லை
ஆவின் தயாரிப்புக்கு மக்கள் வரவேற்பு உள்ளது. ஆவின் நிறுவனம் முடிந்ததாக சிலர் சொன்ன நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் எப்படி செய்ய முடிந்தது?. மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்தி அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications