கோவை அருகே கோர விபத்து.. ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி!
கோவை: கோவை அருகே லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் காரில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பிரிவு அருகே சூலூர் என்ற இடத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரும் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 5ஆக அதிகரித்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications