நடிகர் தனுஷ் அரசியல் வருகை? கோவையில் அமைச்சர் சம்பத் தடாலடி பதில்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், அவரவர் பாணியில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:
"கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கையை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும் என்பதே எங்களது அரசின் நோக்கம். தமிழகத்தை சுற்றுலாத்துறையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் மிகச் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

Dhanush politics

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரும் கோவை மாவட்டத்தின் சிறப்புகளை நன்கு அறிந்தவர். கோவையில் சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தித் தருவதாக அவரும் உறுதியளித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால் இதற்கான பணிகள் வேகம் பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும்.
அத்துடன், போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டை விட பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் தாக்கம் பெருமளவில் குறைக்கடைந்துள்ளது.

போதைப்பொருளை கட்டுப்படுத்த காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது; இதற்கு பொதுமக்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நான் கோவை வரும் ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மாவட்டத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.

கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் எழுந்துள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை அவையில் இதற்கு விரிவான பதில் அளிக்க உள்ளோம். இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான பதில்கள் நிச்சயம் தெரிவிக்கப்படும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசினால், கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமே நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகச் சிறந்த முறையில் அறிக்கை தயாரித்து, கண்டிப்பாக அனுமதி பெறும் வகையில் மத்திய அரசிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்படும்.

கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அங்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில் மாற்று இடங்களும் பரிசீலிக்கப்படும்.
நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்கிறீர்கள்... இந்த ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் முழு உரிமை உள்ளது. அவரவர் தங்களது சொந்த பாணியில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை வாக்களிக்கும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். தற்போது மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டுள்ளதால் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது," இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+