பூரித்துப் போன வானதி சீனிவாசன்.. முகமெல்லாம் சிரிப்பு.. ஓடி வந்த விஜய் ரசிகர்கள்.. வாரியணைத்த பாஜக
கோவை: நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்வு கோவையில் நடைபெற்றுள்ளது.
பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் தங்களை பாஜகவில் ஐக்கியமாக்கி கொண்டனர்.
அண்மையில் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் எதிர்க்காலத்தில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் பாஜகவில் இணைந்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கோவை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர், பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துகொண்டனர். இந்த நிகழ்வு கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மாவட்டம் முழுவதும்
இனி வரும் நாட்களில் இன்னும் சில நடிகர்களின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களையும் பாஜகவில் இணைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், கோவையில் பாஜக நேரடியாக களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே கோவை வெற்றிக்கு அடித்தளமிடும் வகையில் பாஜகவின் செயல்பாடுகளும், வியூகங்களும் அமைந்துள்ளன.

ரஜினி ரசிகர்கள்
அண்மையில் தான் தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் ஏற்பாட்டில் அந்த இணைப்பு வைபவம் நடைபெற்றது. இப்போது என்னவென்றால் கோவையில் விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். நடிகர்களின் ரசிகர்கள் அரசியல் கட்சிகளில் இணைவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

பாஜக முனைப்பு
நடிகர்கள் வராவிட்டால் என்ன, அவர்களது ரசிகர்கள் பட்டாளம் கட்சிக்கு வந்தால் போதும் என நினைக்கிறது பாஜக தலைமை. ரஜினி, விஜய் ரசிகர்களை தொடர்ந்து இன்னும் பல முக்கிய நடிகர்களின் ரசிகர்களும் விரைவில் பாஜகவில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது கவனிக்கத்தக்கது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications