"வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்போல இருக்கு".. தவெக தலைவர் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் ரஞ்சித்
கோவை: பிழைப்புக்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்று மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பூனை குட்டி போன்று கையை கட்டிக்கொண்டு நின்ற நடிகர் விஜய் அதை எல்லாம் மறந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல தற்போது பேசுகிறார் என்றும் நடிகர் ரஞ்சித் விஜயை ஒருமையில் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கிவைத்தனர்.

இக்கூட்டத்தில் நடிகர் ரஞ்சித் பேசியதாவது: தற்போது சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்சனை, சாமி கும்பிடுவதற்கு பிரச்சனை என்ற நிலை இருக்கிறது. சாமி கும்பிடுவதால் தன்னை சங்கி என்றும், உங்களுடன் ஒன்றி இருப்பதால் சாதி வெறியன் என்றும் தன்னை சிலர் விமர்சிக்கின்றனர். இந்திய கலாச்சாரப்படி இருப்பதால் தன்னை சங்கி என்று விமர்சித்தால் தான் ஒரு சங்கிதான்.
இன்று சில கட்சிகளில் ஐந்து கொலை செய்தால் தான் மாவட்ட செயலாளர், பத்து வழக்கு வாங்கினால் தான் மாவட்ட செயலாளர் என்று நிலை உள்ளது. ஆனால் இந்து முன்னணி அமைப்பு அன்பிற்காக இயங்கக்கூடிய ஒரு அமைப்பு. இந்து முன்னணியில் உழைக்கக்கூடிய யாரும் மந்திரி பதவிக்காக உழைப்பதில்லை, டாஸ்மாக் ஏலம் எடுப்பதற்காகவும், அரசு ஒப்பந்தம் எடுப்பதற்காகவும் பணியாற்றுவதில்லை.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரை சொன்னாரா அல்லது அம்மா ஜெயலலிதாவை சொன்னாரா அல்லது கேப்டன் விஜயகாந்தை சொன்னாரா என்றும் ஒருவேளை நேரடியாக சொல்வதற்கு பதிலாக மறைமுகமாக நடிகர் கமலஹாசனை குறிப்பிட்டார்.
பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான். மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஜய் தான், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
இன்று இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று சுட்டிக்காட்டும் விஜய், அன்று பிரதமரை சந்தித்தது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? கல்வியை சமத்துவமாக வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தலைவா என்ற தனது படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே விஜய் காத்திருந்தார். நடிகர் விஜய் அதையெல்லாம் மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல் அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. உலகமே இன்று பிரதமர் மோடியை வியந்து பார்க்கிறது. ஒரு வாக்காளராக தனக்கு தந்தை யார் என்றால் அது மோடி தான்.
அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு கூப்டுற. அறிவில்லையா.. mr மோடி என்கிறாய் ...முதல்வரை uncle என்கிறாய்? நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவாங்க. எனக்கு வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. ஓங்கி ஓட்டாக குத்துவோம்" என்று கோபமாகப் பேசினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications