நடிகை தமன்னா கையில் கரண்டி.. அள்ளி அள்ளி போட்டு.. ஈஷா சிவராத்திரியில் ஸ்வீட் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் இன்று அதிகாலை நடிகை தமன்னா, பக்தர்களுக்கு ஆசை ஆசையாக அன்னதானம் பரிமாறினார்.. இது தொடர்பான காட்சிகளை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கியது. சத்குரு முன்னிலையில் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

Actress tamannaah Bhatia serves food at Isha Yoga Center s Mahashivratri Festival in Coimbatore

சிவனை தரிசிக்கும் இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதற்காக ஈஷா யோகா மையத்தில் பல்வேறு சிற்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கர் உடன் சிறப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த விழாவில் பங்கேற்றார்.

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா கவர்னர் இந்திரசேனா ரெட்டி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தானம், நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் உற்சாமாக வைத்தக்கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை வழங்கி பரவசப்படுத்தினர்.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னா நேற்று இரவு பலருக்கும் ஆர்வமுடன் அன்னதானம் வழங்கினார்.. பக்தர்கள் பலருக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துக்களை கூறிய படி, சட்டியில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை தமன்னா பரிமாறினார்.. ஸ்வீட் பொங்கலை சாப்பிடுங்கள்.. ஹேப்பி சிவராத்திரி என்று கூறிய படி பொங்கலை தமன்னா பரிமாறிய காட்சிகளை சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிவபக்தையான தமன்னா கடந்த ஆண்டும் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்று நடனம் ஆடினார். அந்த காட்சிகள் கடந்த ஆண்டு பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+