ஐ யம் வெயிட்டிங்.. அண்ணாமலை வேட்பாளர் ஆன அடுத்த நொடி.. அடித்து ஆடும் அதிமுக.. இதை பாருங்க
கோவை: லோக்சபா தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அதிமுக கோவை வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வழக்கமாகத் தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த முறை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாமக, தாமக, டிடிவி, ஓபிஎஸ் எனப் பலரும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர். இதற்கிடையே பாஜக தரப்பில் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்ட போதிலும், அதில் தமிழ்நாட்டில் இருந்து யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
இந்தச் சூழலில் தான் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 9 லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கும் நிலையில், நீலகிரியில் எல் முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்கள்.

அதில் முக்கியமாகக் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், டெல்லி பாஜக தலைமை உத்தரவின் பெயரில் கோவையில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கோவையில் இந்த முறை திமுக, அதிமுக நேரடியாகப் போட்டியிடும் நிலையில், அங்கே திமுக vs அதிமுக vs பாஜக என்ற சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையே கோவையில் இப்போது அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக சார்பில் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கை ராமச்சந்திரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சேலஞ் செய்துள்ளார். பாஜகவின் வேட்பாளர் பட்டியலைப் பகிர்ந்துள்ள சிங்கை ராமச்சந்திரன் விஜய் பட டயலாக்கான "ஐ யம் வெயிட்டிங்" என்று பதிவிட்டு அவர் அண்ணாமலையையும் டேக் செய்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications