அண்ணாமலையால் அதிமுக பரிதாபம்.. கோவை 6 சட்டசபை தொகுதியிலும் பாஜகவை விட குறைந்த ஓட்டு வாங்கிய சோகம்
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் அங்குள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் பாஜகவை விட அதிமுக குறைந்த அளவிலேயே ஓட்டு வாங்கி உள்ளது. இதில் 5 சட்டசபை தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ள நிலையில் பாஜக பெற்ற ஓட்டு சதவீதம் அந்த கட்சிக்கான எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. முதல்வர் ஸ்டாலின் கூறியபடி 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி மொத்தமாக கைப்பற்றி உள்ளது.

இதனால் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யாரும் ஜெயிக்கவில்லை. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோற்றார்.
கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 ஓட்டுகள் பெற்றார். அண்ணாமலை 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார். இங்கு அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் 3ம் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 ஓட்டுகள் வாங்கினார்.
இது பாஜக மற்றும் அதிமுகவினர் சோகத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் கோவை லோக்சபா தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் திமுக அதிக ஓட்டுகளை பெற்றதும், அதேவேளையில் பாஜகவை விட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது கோவை லோக்சபா தொகுதியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
அதன்படி கோவை சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது தான் கோவை லோக்சபா தொகுதியாகும். இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பாஜகவின் வானதி சீனிவாசன் உள்ளார். மற்றபடி 5 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் எம்எல்ஏவாக உள்ளனர்.
அதாவது சூலூரில் அதிமுகவின் கந்தசாமி, கவுண்டம்பாளையத்தில் அதிமுகவின் அருண் குமார், கோவை வடக்கில் அதிமுகவின் அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூரில் அதிமுகவின் ஜெயராம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிமுகவின் ஆனந்தன் உள்ளிட்டவர்கள் எம்எல்ஏவாக உள்ளனர். இப்படி கோவை லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 5 இடங்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக இருந்தாலும் கூட பாஜகவை விட அனைத்து தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குறைவாக ஓட்டு வாங்கி உள்ளார்.
அதேவேளையில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத திமுக 6 சட்டசபை தொகுதியிலும் அதிக ஓட்டுகளை அள்ளி உள்ளது. அதன்படி பல்லடம் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு 42.5 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 28.4 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 19.1 சதவீத ஓட்டுகளும் கிடைத்தது. சூலூர் தொகுதியில் திமுகவுக்கு 39.2 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 30.8 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 21.6 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளது.
அதேபோல் கவுண்டம் பாளையம் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு 41.2 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 33.4 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 16.6 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. கோவை வடக்கு தொகுதியில் திமுகவுக்கு 40.6 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 35.8 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 14.5 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளது.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் திமுகவுக்கு 42.7 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 36.9 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 13.3 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளது. சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவுக்கு 42.3 சதவீத ஓட்டுகளும், பாஜகவுக்கு 33.8 சதவீத ஓட்டுகளும், அதிமுகவுக்கு 15.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளது. இது கோவையில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இதனை அதிமுக தலைமை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலத்தில் கோவையில் திமுக மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications