ஹலோ பாஸ் அந்த ஹாட்லைன் என்னாச்சு.. ரீசார்ஜ் பண்ணணுமா – அண்ணாமலையை விளாசிய சிங்கை ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களாக களம் கண்டனர்.

தேர்தலின்போது அண்ணாமலை கோவை தொகுதிக்கு என்று தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். 500 நாள்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். கோவை மக்களுக்கான ஹாட்லைனாக இருப்பேன். ஒரே அழைப்பில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுப்பேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். தேர்தலில் தோல்வியடைந்தாலும், மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, கோவைக்காக நிறைய கோரிக்கை வைத்துள்ளோம். நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சிங்கை ராமச்சந்திரன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Singai Ramachandran Annamalai Coimbatore

இந்நிலையில் அதிமுக ஐடி விங் தலைவரும், கோவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக களம் கண்ட சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவைக்கு அண்ணாமலை சொல்லியது என்னாச்சு . ஒரே போனில் பிரச்னைக்கு தீர்வு என்று சொன்னாரே. அது என்னாச்சு. அண்ணாமலை அளித்த வாக்குறுதிகள் எதுவும் நடக்கவில்லை. கோவை வளர்ச்சிக்கு எந்த விதமான திட்டங்களும் வரவில்லை. கோவைக்கு எந்தத் திட்டமும் அறிவிக்கவில்லை. திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அண்ணாமலை என்ன செய்தார். எம்.பி வேண்டும் என்று சொல்லும் பாஜக, வரி வேண்டும் என்று சொல்லும் பாஜக தமிழ்நாட்டுக்கு ஏன் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. அண்ணாமலை ரொம்ப பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 21 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவில்லை. கோவை உங்களுக்கு சம்பந்தம் இல்லை. இருந்தபோதும் இங்கு போட்டியிட்டீர்கள். அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. கோவை மக்களுக்கு இவர்கள் நல்லது செய்ய முடியாது. அதிமுக தான் கோவைக்கு வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வரும்.

தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளனர். திமுகவும் பாஜகவும் மக்களை மத்தளம் போன்று இரண்டு பக்கமும் அடிக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக கோவைக்கு பலமுறை வந்த பிரதமர் நரேந்திர மோடி, இப்போது கோவைக்கு ஒரு திட்டத்தை கொடுத்தாரா. அண்ணாமலை சொல்லிய ஹாட் லைன் எண் என்னாச்சு. ரிசார்ஜ் செய்யவில்லையா. ரீசார்ஜ் செய்து கொடுக்க வேண்டுமா. மொத்தத்தில் இந்த பட்ஜெட் தமிழ்நாட்க்கு ஏமாற்றம் தான்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை தீயை, டீ ஊற்றி அணைத்து இருப்பார்கள்போல. திமுக விஞ்ஞானமாக ஊழல் செய்பவர்கள். அண்ணாமலை இவ்வளவு பேசியும், இவ்வளவு செலவு செய்தும் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் சி.பி ராதகிருஷ்ணனை விட வாக்கு குறைவாகத்தான் வாங்கியுள்ளார். பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+