ஷாக்.. எடப்பாடியுடன் செல்பி எடுக்க முயன்ற தொண்டர்! செல்போனை பறித்த அதிமுக எம்எல்ஏ.. பரபரப்பு
கோவை: கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்பி எடுக்க முயன்ற அதிமுக தொண்டரின் செல்போனை அருண் குமார் எம்எல்ஏ திடீரென பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருண்குமார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 10 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார்.

இந்நிலையில் தான் எம்எல்ஏ அருண் குமார் மகனின் திருமண வரவேற்பு இன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் நடந்தது. இதில் பங்கேற்க வேண்டும் என அவர் அனைத்து அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி இருந்தார்.
இதையடுத்து இன்று ஏராளமான அதிமுக தலைவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார். இதையடுத்து அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். எடப்பாடி பழனிச்சாமியை பார்த்த தொண்டர்கள் சிலர் அவருடன் செல்பி எடுக்க தயாராக இருந்தனர்.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி நடந்து செல்லும் வழியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பாக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண் குமார் நடந்து சென்றார். அந்த சமயத்தில் கையில் செல்போனை உயர்த்தி பிடித்தபடி தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்பி எடுக்க முயன்றார். இதை பார்த்த அருண் குமார் எம்எல்ஏ அவரது செல்போனை திடீரென பறித்தார்.

அதன்பிறகு செல்பி எடுக்க வேண்டாம் என தொண்டரிடம் கூறிய அருண்குமார் எம்எல்ஏ செல்போனை அவரிடம் வழங்கினார். இதற்கிடையே தொண்டரிடம் அருண் குமார் எம்எல்ஏ செல்போனை பறித்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications