கோவையில் ஆட்டத்தை தொடங்கிய எஸ்பி வேலுமணி.. ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் கொலுசு, ஹாட் பாக்ஸ்
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நெருங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஒவ்வொரு வீட்டிலும் கொலுசு, ஹாட் பாக்ஸ், சேலை, வேட்டி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் தொகுப்பை வழங்க தொடங்கியுள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு அடுத்தக்கட்ட ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் திமுக சார்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் எடப்பாடி பழனிசாமியின் தோல்வி கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் முழங்கினார். 2021 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவால் அதிக வெற்றிகளை பெற முடியவில்லை. ஆனால் திமுக கொஞ்சம் கூட அசரவில்லை. மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமித்து பணிகளை மேற்கொண்டது.

அதன் பலனாக கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதோடு, லோக்சபா தேர்தலிலும் அபார வெற்றியை பெற்றது. ஆனால் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றியை பெற வேண்டும் என்று தீவிரமாக பணியாற்ற தொடங்கி இருக்கிறது. கடந்த முறையை போலவே கோவையின் 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தீவிரமாக இருக்கிறார்.
இதனிடையே திமுக தரப்பில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் அளிக்கப்பட்டது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால் எஸ்பி வேலுமணி கொஞ்சமும் அதிரவில்லை. ஏனென்றால் பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பரிசுப்பொருட்களை அளிக்க எஸ்பி வேலுமணி முடிவு செய்திருக்கிறார்.
இதற்கான டோக்கன் கொடுக்கும் பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. தற்போது நிறைவடைந்திருக்கும் சூழலில், பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடங்கி இருக்கிறது. அதன்படி பரிசுப் பொருட்களில் ஹாட்பாக்ஸ், பெரிய தட்டு, வேட்டை, சட்டை, சேலை, குடை, கொலுசு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரத்யேக குழு ஒன்றையும் எஸ்பி வேலுமணி அமைத்திருக்கிறார்.
இந்த பணிகளை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்கு முன்பாகவே முடிக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே கோவையில் பரிசுப் பொருட்கள் விநியோகம் உச்சத்தை எட்டி இருக்கிறது. இதனால் தேர்தல் அறிவிப்புக்கு பின் திமுக மற்றும் அதிமுகவின் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும் என்பதால், கோவை மக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications