"பாட்டிலுக்கு 10 ரூபாய்".. செந்தில்பாலாஜியை பார்த்ததும் அதிமுகவினர் செய்த சம்பவம்.. பரபரப்பான கோவை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜி இன்று வருகை புரிந்திருந்தனர். அப்போது, விமான நிலையம் வெளியே சூழ்ந்திருந்த அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க!! மற்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் என அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜயைப் பார்ப்பதற்காகவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். நீண்ட நேரமாக ஏராளமான மக்கள் குவிந்திருந்த நிலையில், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமடைந்தனர்.

Senthil balaji aiadmk edappadi palaniswami

ஒருகட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில், நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.

தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கரூர் சம்பவத்தின்போது அன்றைய தினம் முழுவதும் செந்தில்பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் சோகத்துடன் முகாமிட்டிருந்தார். அதேசமயம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கரூர் சர்ச்சை சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று கரூருக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்கியுள்ளார். ஆனால், விஜய் இதுவரை கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காதது அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சியினர் பலரும் செந்தில் பாலாஜியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜி இன்று வருகை புரிந்திருந்த நிலையில், அப்போது, விமான நிலையம் வெளியே சூழ்ந்திருந்த அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க!! மற்றும் பாட்டிலுக்கு 10 ரூபாய் என அதிமுகவினர் முழக்கம் எழுப்பியதால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பதற்காக அதிமுகவினர் ஏராளமான பேர் திரண்டிருந்தனர். முன்னதாக நாளை கோவையில் நீளமான மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அமைச்சர்கள் எவா வேலு, தாமோ அன்பரசன் ஆகியோர் வருகை தந்தனர். அமைச்சர்களை வரவேற்க மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் வந்திருந்தார்.

அமைச்சர்களை வரவேற்ற பின்பு செந்தில்பாலதி வெளியே வந்தபோது அதிமுகவினர் திமுக அமைச்சர்களை பார்த்தவுடன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க!! என முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதில் ஒரு சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து பாட்டிலுக்கு 10 ரூபாய் என முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக அமைச்சர்கள் ஏதும் கண்டு கொள்ளாமல் புறப்பட்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+