அப்போ அதிமுக பாஜக கூட்டணி? நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் சந்தித்தனர். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நிர்மலா சீதாரமனை மூன்று எம்.எல்.ஏக்களும் சந்தித்துள்ளனர்.

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் முடிவு தொண்டர்கள் எடுத்தத்து என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இனி சேரப்போவது இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தாலும் பாஜக மேலிடம் இது பற்றி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

AIADMK MLAs including Pollachi Jayaraman meet Union Finance Minister Nirmala Sitharaman

அதிமுக உடன் கூட்டணியில் இருப்பதையே பாஜக தலைவர்கள் பலரும் விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதேபோல், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார்.

அண்ணாமலையின் டெல்லி பயணத்தில் அதிமுக உடனான கூட்டணி முறிவு முக்கிய அஜெண்டாவாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவையடுத்து, தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், ஆகியோர் நிர்மலா சீதாரமனை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வானதி சீனிவாசனும் உடன் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த நிர்மலா சீதாராமன், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று இருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதா அல்லது அரசியல் எதுவும் பேசப்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிர்மலா சீதாரமனை அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தது முக்கியத்தும் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+