தவெக சென்ற அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரூ.35 கோடி லஞ்சம்.. பொள்ளாச்சி ஜெயராமன் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெக சென்ற எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.35 கோடி வழங்கப்பட்டதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன், "மக்களின் ஓட்டை பெற்று இரட்டை இலையில் வெற்றி பெற்று கட்சி மாறிய அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் ரூ.35 கோடி கெடுக்கப்பட்டுள்ளது. இந்த மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றுவதற்காக நபர் ஒருவருக்கு ரூ.35 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஓட்டை வாங்கி ஏமாற்றியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அதற்காக தான் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் வந்துள்ளது.

all-the-admk-mlas-who-joined-tvk-received-35-crore-said-pollachi-jayaraman

40,000 ஓட்டுகள்

மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல், தாராபுரத்தில் சத்யபாமா தவெக கட்சி சார்பாக போட்டியிடுகிறார்கள். அவர்களின் பெயரை சொல்வதற்கே எனக்கு வாய் வரவில்லை. இவர்கள் இரண்டு பேருமே கடந்த பொதுத்தேர்தல் தவெக சார்பில் நின்று வெற்றி பெற்றவர்கள். தாராபுரத்தில் தவெகவை விட 40,000 ஓட்டுகள் பெற்றோம். விசில் சின்னத்தை விட இரட்டை இலை கூடுதல் ஓட்டு பெற்று தாராபுரத்தில் வெற்றி பெற்றோம்.

எதுக்காக இந்தம்மா ராஜினாமா செய்தனர் என்று மக்கள் கேட்டு அந்தம்மா சொல்லவில்லை. நம் ஆட்சி அமைந்திருந்தால் இங்கேயே இருந்திருப்பாராம். ஆட்சி வராததால் ஆளுங்கட்சிக்கு போக வேண்டும் என்று ராஜினாமா செய்து சென்றுள்ளனர். சிலர் வழக்குகள் கழுத்தை நெரிப்பதால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். அவர்கள் பெயர்களை சொல்வதற்கும் மனம் வரவில்லை. முழுக்க முழுக்க சுயநலத்துக்காக இப்படி செய்துள்ளனர்.

ரூ.35 கோடி கை மாறியதா

அவர்களுக்கு மக்களை பற்றியோ, இத்தனை ஆண்டு வளர்த்துவிட்ட அதிமுகவை பற்றியோ எந்த கவலையும் இல்லை. ஏராளமான நன்மை வரும் என்று நினைத்து மக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம். விலைவாசி விண்ணை முட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது. வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. விவசாயம் முற்றிலும் முடங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. ஐயுஎம்எல் எம்எல்ஏ பாரூக் பாஷா அண்மையில் கோடி கோடியாக பணம் கொடுக்கிறார்கள் என்று பேசியது சர்ச்சையானது. தற்போது அதிமுகவில் இருந்து தவெக சென்ற எம்எல்ஏக்கள் ரூ.35 கோடி பெற்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசு முறையாக விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+