கோவைக்கு இது சுக்கிர திசை.. புதுசா திறக்கப்பட்ட மால்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: தொழில்நகரமான கோவை, தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐடி நிறுனவனங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஏராளமான ஷாப்பிங் மால்களும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் மருதமலை சாலை அருகே கோவையின் ஐந்தாவது ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்துக்கு சமீபகாலாக ஏராளமான அரசுத் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கோவை விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், செம்மொழி பூங்கா திட்டங்களுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதேபோல மெட்ரோ ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

coimbatore mall

மறுபக்கம் ஐடி துறையிலும் கோவை சீரான வளர்ச்சியை வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய ஐடி பார்க்குகளை திறந்து வருகின்றன. இதேபோல பல தனியார் நிறுனங்களும் கோவையில் தங்களது கிளைகளை திறந்து வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி என்ற அந்தஸ்தில் இருந்து மெட்ரோ சிட்டி என்ற அந்தஸ்தை நோக்கி கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஷாப்பிங் மால்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. கோவை சிட்டியில் ஏற்கனவே ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் மால், புரோசோன் மால், பிராட்வே மால் ஆகியவை இருக்கின்றன. லட்சுமி மில்ஸ் பகுதியில் கடந்தாண்டு லூ லூ ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.

இதுதவிர மேலும் சில மால்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரபல ஃபீனிக்ஸ் நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் மால் கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிஎன்புதூர் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அல்வெல் மால் (Alveal Fun Savy Malll) இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் பிவிஆர் சினிமாஸ் உள்ளது. ரியல் எஸ்டேட் துறை அசுரவேகத்தில் உள்ள மருதமலை சாலை வடவள்ளியை ஒட்டி இந்த மால் அமைக்கப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை சர்ப்ரைஸாக வந்துள்ளது.

ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் மால் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பரப்பளவில் இது சற்று சிறிய மால் தான். மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் ஃபுட் கோர்ட் மற்றும் ஃபன் சிட்டி உள்ளது. இரண்டாம் தளத்தில் பிவிஆர் சினிமா உள்ளது. அதில் மொத்தம் ஐந்து ஸ்க்ரீன்கள் உள்ளன. பிவிஆர் சினிமா புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மால் சீரநாயக்கன்பாளையம் நேதாஜி சாலை பகுதியில் அமைந்துள்ளது.

பார்க்கிங் வசதிக்காக அண்டர் கிரவுண்ட்டில் இரண்டு தளங்களும், மாலுக்கு எதிரே உள்ள மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலின் ஹைலைட் தியேட்டர் தான். அந்தப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவுக்கு தியேட்டர்கள், மால்கள் இல்லை. அதனால் கோவையில் வளர்ந்து வரும் அந்தப் பகுதியை டார்கெட் செய்து திறந்துள்ளனர்.

கோவை தொழில் நகரம், செல்வந்தர்கள் அதிகம் இருக்கும் என்பதாலே பல மால்கள் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதே போல மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே லாங்வாங் மால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் இந்த மாலும் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையம் விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் வந்தால் இன்னும் அதிக நிறுவனங்கள் வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+