அண்ணாமலையுடன் சந்திப்புக்கான காரணம் இதுதான்.. கோவையில் டிடிவி தினகரன் விளக்கம்
கோவை: கோவையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் நேற்று சந்தித்தனர். சுமார் 1 மணி நேர சந்திப்புக்குப் பின்னர் அண்ணாமலை கோயம்புத்தூரில் இருந்து நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், அண்ணாமலையுடன் சந்திப்பு ஏன் என்பது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அண்ணாமலை, ஓ பன்னீர்செல்வத்துடனான சந்திப்புகளுக்கு பின் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி அமைப்பது, பிரசாரம், மக்கள் சந்திப்பு பயணம், நலத் திட்டப் பணிகள், ஆலோசனைக் கூட்டம், பொதுக் கூட்டம், கட்சி நிர்வாகிகள் கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் கடந்த செப்டம்பர் மாதம் விலகினார். இதனிடையே, டிடிவி தினகரன் நேற்று கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தனது வீட்டில் அண்ணாமலை டிடிவி தினகரனுக்கு இரவு விருந்து கொடுத்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, அண்ணாமலைக்கு திடீரென டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததையடுத்து, அண்ணாமலை டிடிவி தினகரன் சந்திப்பை முடித்துவிட்டு இரவு 9.30 மணிக்கு விமானத்தில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், கோவையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலையை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன் கூறுகையில், கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு இன்னும் காலம் உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.
அமமுக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து பொறுத்திருந்து முடிவு எடுப்போம். அண்ணாமலை எனது நெருங்கிய நண்பர். நேற்றைய சந்திப்பு நட்பு ரீதியிலானது. அந்த சந்திப்பில் அரசியல் இல்லை. விலைபோகாத தொண்டர்கள் என்னுடன் பயணிக்கின்றனர் என்றார்.
-
இணையதளம் இதுதான்.. அண்ணாமலை அரசியல் இயக்கத்தில் இணைவது எப்படி? வெளியான அறிவிப்பு -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்











Click it and Unblock the Notifications