'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ
Recommended Video
கோவை: அமமுகவைச் சேர்ந்த புகழேந்தி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் கட்சி தாவுவது குறித்து பேசும் புகழேந்தி தினகரனையும் விமர்சித்து பேசுவது போன்ற காட்சிகள் உள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு பலரும் அமமுகவில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். முன்னணி நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதேபோல் அமமுக நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகியான புகழேந்தி கட்சி தாவுவது குறித்து ஹோட்டலில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில் புகழேந்தி பேசுகையில், நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூடஇவர் இல்லை" என பேசுகிறார்.
இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது புகழேந்தியும் கட்சி தாவத்தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே அமமுகவில் பலரும் கட்சி தாவிய நிலையில் இப்போது இருப்பவர்களும் அணி மாறத்தயாராக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications