கோயம்புத்தூர் நகரத்திற்கு மிகமிக பக்கத்தில்.. காலையிலேயே ஊருக்குள் வந்த யானை.. என்ன ஒரு ஆக்ரோஷம்
கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாகி விட்டது. இடம் பெயர்வு , என பல்வேறு காரணங்களுக்காக உலா வருகின்றன. அந்த வகையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் பகுதியில உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் காட்டுயானை ஒன்றை காலையிலேயே ஊருக்குள் வந்தது. இதனால் ஊர் மக்கள் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை மாநகரம் பாலக்காடு கனவாய் மற்றும் நீலகிரி மலைத்தொடருக்கு நடுவில் மலை அடிவாரத்தில் உள்ள மிகப்பெரிய அருமையான நகரம் ஆகும். கோவை மாநகரின் எல்லைப்பகுதியை தாண்டி உள்ள தொண்டாமுத்தூர், நரசீபுரம், போளுவப்பட்டி, தேவராயபுரம், மருதமலை, வெள்ளியங்கிரி, கோவையில் தொண்டாமுத்தூர், போரூரை தாண்டி உள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் முன்பைவிட அதிகரித்துவிட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளான இங்கு யானைகள் அடிக்கடி உணவு , தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. தொண்டாமுத்தூர் தாண்டி, நரசீபுரம் பகுதியை கடந்து உள்ள வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.உணவுக்காகவும். பல்வேறு காரணங்களுக்காகவும் இடம் பெயருவது அதிகமாக உள்ளது.
அந்த வகையில் இன்று காலை 6.30 மணி அளவில் நரசீபுரம் அடுத்த வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் உலா வந்த காட்டு யானை சாலையோரத்தில் இருந்த கார் இரு சக்கர வாகனத்தை சேதம் செய்து மூர்க்கமாக சென்றது. கோவிலுக்கு பூ பறிக்க சென்ற 90 வயது முதியவரை தாக்கியது. இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் கூச்சலிட்டதால், வேகமாக மீண்டும் வனப் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வனத் துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். காலையில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானையால் அப்பகுதி மக்கள் வீதி அடைந்து அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொண்டாமுத்தூரை அடுத்த தேவராயபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று வந்தது. இது குறித்து தகவல் அறிந்து போளுவாம் பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை கண்காணித்தார்கள்.
பின்னர் அவர்கள், அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் பாதை வழியாக ஜீப்பில் சென்று காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதியை நோக்கி விரட்டி சென்றார்கள். அப்போது காட்டு யானை திடீரென்று திரும்பி வனத்துறை வாகனத்தை நோக்கி ஆவேசமாக வந்தது. இதனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தினர். இதற்கிடையே அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி வந்து துதிக்கையால் வனத்துறை வாகனத்தை பலமாக தாக்கியது.
இதில் அந்த ஜீப்பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். வனத்துறை வாகனத்தை, காட்டுயானை தாக்கி சேதப்படுத்தும் காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அது சமூக வலைத்தளங்களில் பரவியது.
கோவை மாவட்டம் பூண்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று அண்மையில் வெள்ளியங்கிரி கோவில் மைதானத்திற்கு ஓடி வந்தது. அதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் தப்பித்து ஓடினார்கள். இதையடுத்து காட்டுயானை கோவில் அலுவலகம் அருகே நின்றது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தார்கள். இதனால் அங்க பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து நீண்டபோராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே இப்போது வெள்ளிமலைபப்ட்டினம் பகுதியில் ஊருக்குள் யானை வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications