நீட் தேர்வின் போது தாலியை கழற்ற சொன்னார்களே.. அண்ணாமலை அமைதி காத்தது ஏன்? அன்பில் மகேஷ் பதிலடி!
கோவை: நீட் தேர்வின் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டும் என்று சொன்ன போது அண்ணாமலை அமைதி காத்தது ஏன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை மாற்றி மாற்றி பேசக் கூடாது என்று கூறிய அன்பில் மகேஷ், பள்ளிகளில் அறிவு சார்ந்த விஷயங்களை மட்டும் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த கோயில் விழா ஒன்றில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஒரு பெண் பொட்டு வைத்து கொண்டு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றால், அந்த பெண் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றுவார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் திருநீறு வைத்து கொள்ள வேண்டும், ருத்ராட்சம் போட்டு கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார்.

கோவையில் அன்பில் மகேஷ்
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். கோவை மாவட்ட கல்வித் துறை சார்பாக 'கற்றல் அடைவு' குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளியில் என்னென்ன செய்யப் போகிறோம்.
பள்ளிகளில் ஆய்வு
என்னென்ன பாடப்பிரிவுகளில் பின் தங்கியுள்ளோம், அதனை எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனியாக ரிப்போர்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகள் பின் தங்கி இருக்கின்றன. ஹைடெக் லேப் டெண்டர் பணிகளை பைனான்ஸ் பிரிவு சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணாமலை கருத்து பதில்
அதேபோல் எஸ்எஸ்ஏ திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. தமிழக அரசு முதல் தவணையாக ரூ.700 கோடி ஒதுக்கி இருக்கிறது. மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு வழக்கு போடப்படும் என்று கூறினார். தொடர்ந்து அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளது.
பிற்போக்குதனம்
அதில் யாரின் தலையிடும் இருக்க கூடாது. பள்ளி என்பது அனைவருக்கும் பொதுவான இடம். பள்ளிகளில் அறிவுசார்ந்த விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதே அறிவுரையாக இருக்க வேண்டும். அதனை விடுத்து இதுபோன்ற விஷயங்களை பிற்போக்குதனம் என்று தான் கூறுவேன். மத நம்பிக்கைகளில் யாரும் தடையிடக் கூடாது.
நீட் தேர்வு விவகாரம்
ஆனால் பள்ளிகளில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். மதம் சார்ந்து அவ்வாறு செய்கிறோம் என்று கூறினால், நீட் தேர்வு எழுதும் போது தாலியை கூட கழற்றி வைத்துவிட்டு எழுதுங்கள் என்று கூறுகிறார்களே.. அப்போது அண்ணாமலை பேசுவாரா? அங்குன்றும், இங்கொன்றும் பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications